For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராடியா டேப்: டாடா கோரிக்கையை நிராகரித்த மத்திய அரசு!

By Chakra
Google Oneindia Tamil News

Ratan Tata
டெல்லி: சிபிஐ பதிவு செய்த தனது உரையாடல்களை ஊடகங்கள் தொடர்ந்து பிரசுரிககாமல் அல்லது ஒலிபரப்பாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், இதனை வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை வேண்டும், என்ற தொழிலதிபர் ரத்தன் டாடாவின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்தது.

நீரா ராடியா டெலிபோன் டேப் விவகாரம் வெளியானதை எதிர்த்து, தொழில் அதிபர் ரத்தன் டாடா, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த டெலிபோன் உரையாடல்கள், பத்திரிகை மற்றும் டி.வி. ஊடகங்களில் வெளியாவதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும், ஏற்கனவே அதை வெளியிட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவர் தாக்கல் செய்திருந்த மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதுகுறித்து அனுப்பிய நோட்டீசுக்கு பதில் அளித்து, மத்திய அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் 8 பக்க பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் "டேப் விவகாரத்தை வெளியிடுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க முடியாது" என்று பிரமாண பத்திரத்தில் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.

மேலும் இது தொடர்பாக மத்திய குற்றப் புலனாய்வு அமைப்பு, வருமான வரித்துறை மற்றும் நிதி அமைச்சகம் ஆகிய மூன்றும் உச்சநீதிமன்றத்தக்கு பதில் அனுப்பியுள்ளன. அதில், ஏற்கெனவே பொது மீடியாவில் புழக்கத்தில் உள்ள நீரா ராடியா, ரத்தன் டாடா பேச்சுக்களை தங்களால் தடுக்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளன.

English summary
The Union Govt told the Supreme Court that it was not possible or feasible to retrieve records of phone conversations between corporate lobbyist Niira Radia and Ratan Tata, the head of India"s largest business house. The Finance and Home ministries and the Income-Tax Department assured the court that they had not leaked the tapes. In a joint affidavit, the three said that while they were trying to ensure that more tapes were not leaked, they could not prevent circulation of those already in websites.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X