For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஸ்பெக்ட்ரம் பரபரப்புக்கு மத்தியில் டெல்லி வந்தார் சீனப் பிரதமர் ஜியாபோ

Google Oneindia Tamil News

Wen Jiabao
டெல்லி: ஸ்பெக்ட்ரம் விவகாரத்தால் நாடு முழுவதும் சிபிஐ அதிரடி ரெய்டுகளை நடத்தி பெரும் பரபரப்பு நிலவி வரும் சூழ்நிலையில், சீனப் பிரதமர் வென் ஜியாபோ இன்று டெல்லி வந்து சேர்ந்தார்.

3 நாள் பயணமாக அவர் இந்தியா வந்துள்ளார். இருநாடுகளுக்கும் இடையிலான பல்வேறு பிரச்சினைகளை தீர்க்கவும், வர்த்தக உறவை வலுப்படுத்தும் நோக்கிலும் ஜியாபோ டெல்லி வந்துள்ளார்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவகு்கு வரும் சீனப் பிரதமர் வென் ஜியாபோ. அவருடன் 400க்கும் மேற்பட்ட தொழிலதிபர்கள் குழுவும் வந்துள்ளது.

இரு தரப்பு பிரச்சினைகள், சர்வதேசப் பிரச்சினைகள், புவி வெப்ப தடுப்பு நடவடிக்கைள் உள்ளிட்டவை குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் விவாதிப்பார்கள். அதேசமயம், இந்தியத் தரப்பில் சீனாவிடம் விவாதிக்கப்படவுள்ள முக்கியப் பிரச்சினைகள் - காஷ்மீரிகளுக்கு தனி விசா தரும் குசும்புத்தனத்தை நிறுத்த வேண்டும், எல்லைப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்பதேயாகும்.

வென் ஜியாபோ வருவதையொட்டி சில நாட்களுக்கு முன்பு காஷ்மீரிகளுக்கு தனி விசா தருவதை சீனா நிறுத்தி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Chinese Premier Wen Jiabao arrived in New Delhi on Wednesday on a three-day visit with the aim to boost trade and soothe tensions between the two fastest-growing major economies in the world.Wen is accompanied by more than 400 business leaders, underscoring the growing commercial ties of countries which, between them, house more than a third of the world"s population
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X