For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

2007ல் இருந்து 2000 மரங்களை இழந்துள்ள டெல்லி: கணக்கெடுப்பில் தகவல்

Google Oneindia Tamil News

Delhi
டெல்லி: கடந்த 2007-ம் ஆண்டு முதல் தற்போது வரை தலைநகர் டெல்லி சுமார் 2000 மரங்களை இழந்துள்ளது.

கடந்த 2007-ம் ஆண்டு முதல் டெல்லி முனிசிபாலிட்டிக்கு சொந்தமான பகுதிகளில் பல்வேறு பணிகளுக்காக சுமார் 900 மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. மனிதர்கள் மட்டும் தான் மரங்களை அழிக்க முடியுமா என்று இயற்கையும் தன் பங்கிற்கு மழை மற்றும் புயல் மூலம் 850 மரங்களை வேரோடு பெயர்த்தெடுத்தது.

மேலும், புது டெல்லி முனிசிபாலிட்டி கவுன்சில் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களில் இருந்த சுமார் 299 மரங்கள் இயற்கை சீற்றத்தில் விழுந்தன.

டெல்லி அரசின் வனத்துறையோ, டெல்லி கன்டோன்மென்ட் போர்டோ நகரத்தில் இருக்கும் மரங்களின் நிலைமை குறித்து எந்த ஆய்வும் மேற்கொள்ளவில்லை.

ஆனால், டேராடூனைச் சேர்ந்த வன ஆராய்ச்சி நிறுவனம் 48 சாலைகள் மற்றும் என்டிஎம்சி பகுதிகளில் இருக்கும் 6288 மரங்களின் நிலைமை குறித்து கணக்கெடுத்தது. இதில் 5507 மரங்கள் ஆரோக்கியமாகவும், 435 இறந்தும் அல்லது சேதமடைந்தும், 86 உருக்குலைந்தும், 221 நோய்வாய்பட்டும், 145 சேதமடைந்தும் இருப்பதாக தெரிய வந்துள்ளது.

English summary
Delhi has been losing 2000 trees since 2007. In the competition between man and nature 2000 trees got destroyed and uprooted. A Dehra Dun based Forest Research Institute conducted a survey about the health of the trees in the capital and came out with exact figures.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X