For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஷாப்பிங் போர்ட்டல்களுக்கு ஆரம்ப முதலீடு-ஆர்வம் காட்டும் நிதி நிறுவனங்கள்!

Google Oneindia Tamil News

Venture Capital
பெங்களூர்: குறிப்பிட்ட சில ஷாப்பிங் இணையதளங்களுக்கு மட்டும் ஆரம்ப முதலீடு தர Venture Capital நிறுவனங்கள் ஆர்வம் காட்டும் போக்கு இந்தியாவில் அதிகரித்துள்ளது.

By invitation only எனும் நிபந்தனையுடன் இயங்கும் வர்த்தக இணையதளங்கள் அமெரிக்காவில் மிகப் பிரபலம். இந்த வகை இணையதளங்களில் ஆடைகள், டிசைனர் வாட்சுகள் என பேன்ஸி பொருள்கள் ஆன்லைனில் விற்கப்படும். இதன் சிறப்பு என்னவென்றால், எந்தப் பொருளாக இருந்தாலும் இந்த தளங்கள் மூலம் வாங்கினால் 40 முதல் 50 சதவீதம் வரை தள்ளுபடி உண்டு.

கிளப்புகள், ஷாப்பிங் குழுமங்கள் மூலம் இந்த இணையதளங்களில் உறுப்பினராகும் நபர்களுக்கு இந்த சலுகை வழங்கப்படும். அதாவது பெரிய அளவு வாங்கும் சக்தி கொண்டவர்கள் இதன் மூலம் இந்த தளங்களுக்கு வருவார்கள்.

இத்தகைய போர்ட்டல்கள் இப்போது இந்தியாவிலும் அதிகரித்துள்ளன. இவற்றுக்கு ஆரம்ப முதலீடு தரவும் வென்ச்சர் கேபிடல் நிறுவனங்கள் (நிதி நிறுவனங்கள்) தயாராக உள்ளன.

தற்போது இந்தியாவில் இயங்கும் 7 முக்கிய ஷாப்பிங் இணையதளங்களில் மூன்றிற்கு இதுபோன்ற ஆரம்ப முதலீடு எளிதில் கிடைத்துள்ளது.

செகோஷியா கேபிடல் நிறுவனம் ஒரு இணையதளத்துக்கு 8 மில்லியன் டாலர் ஆரம்ப நிதி வழங்கியது. ஹீலியன் வென்சர்ஸ், அக்ஸல் பார்ட்னர்ஸ் போன்ற நிறுவனங்கள் வேறொரு இணையதளத்துக்கு 2.8 மில்லியன் வரை நிதி வழங்கியுள்ளன.

ஜெர்மனியின் மல்டி மீடியா நிறுவனமான ஆக்ஸெல் ஏஜி இந்தியாவின் ஒரு ஷாப்பிங் இணையதளத்தின் 19.1 சதவீத பங்குகளை வாங்கியுள்ளது.

இந்த இணையதளங்கள் மூலம் மட்டுமே மாதத்துக்கு ரூ 40 முதல் 50 லட்சம் ரூபாய் வரை பொருள்கள் விற்பனையாவதால் தைரியமாக முதலீடு தருகிறோம் என்கிறார் ஹீலியன் வென்சர்ஸ் நிறுவனத்தின் ராகுல் சவுத்ரி.

இன்றைய நிலவரப்படி, இந்த வர்த்தக இணையதளங்களின் மார்க்கெட் மதிப்பு 100 மில்லியன் டாலர் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் மேலும் சில இணையதளங்களுக்கு சிறிய அளவில் ஆரம்ப முதலீடு தரப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

English summary
An emerging niche within the Indian retail sector has caught the fancy of venture capitalists (VCs). And these are "by invitation only" shopping websites. Three out of just about 6-7 companies that play in the space have received private investments in the past two months.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X