கருப்புப் பண முதலைகள் 17 பேருக்கு நோட்டீஸ்-பிரணாப் தகவல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: ஸ்விஸ் வங்கிகளில் கருப்புப் பணத்தைக் குவித்து வைத்துள்ள 17 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக கூறியுள்ளார் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி. ஆனால் அவர்கள் யார் என்ற விவரத்தை பகிரங்கமாக தெரிவிக்க முடியாது என்று பிடிவாதமாக கூறியுள்ளார்.

இதுகுறித்து பிரணாப் முகர்ஜி கூறுகையில், சிலருடைய பெயர்கள் எங்களுக்குக் கிடைத்துள்ளது. அதில் உள்ள 17 பேருக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டுள்ளோம். இந்த பெயர்களை பகிரங்கமாக வெளியிட முடியாது. சுப்ரீம் கோர்ட் விசாரணையின்போது இதைத் தெரிவிப்போம்.

இந்தத் தகவல்களை வரி ஏய்ப்பு, வரி வசூலிப்பு ஆகியவற்றுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என சுவிஸ் வங்கிகள் நிபந்தனை விதித்திருப்பதால் பகிரங்கமாக இவற்றை வெளிப்படுத்த முடியாத நிலை உள்ளது என்றார் பிரணாப் முகர்ஜி.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Finance Minister Pranab Mukherjee has said the government has served notices to 17 persons related to the Swiss Banks black money trail, but it is not possible to reveal their names. "We have received a few names and already served notices on 17 persons and prosecution has begun," he said. He said the government cannot reveal the names of account holders who have stashed their money away in Swiss banks as the information can only be used for taxation purposes. "The government, suo motu, cannot reveal the names because according to treaty we can only use the information for taxation purposes. We can only reveal the details in the open court when the matter comes up for hearing," Mukherjee said.
Please Wait while comments are loading...