For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பேச்சுவார்த்தை தொடரும் என நம்புகிறோம்-காங்.

Google Oneindia Tamil News

டெல்லி: திமுக முடிவு குறித்து நாங்கள் அவசரப்பட்டு எதையும் சொல்ல விரும்பவில்லை. பேச்சுவார்த்தை தொடரும் என்று நம்புகிறோம் என்று காங்கிரஸ் கட்சி பதிலளித்துள்ளது.

காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்கும் வகையில், திமுக நேற்று அதிரடி முடிவை எடுத்து அறிவித்தது. இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை காங்கிரஸ் என்று தெரிகிறது.

திமுகவின் முடிவு குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, எல்லாம் முடிந்து போய் விட்டதாக நாங்கள் கருதவில்லை. பேச்சுவார்த்தை தொடரும் என நம்புகிறோம்.

இந்த சமயத்தில் நாங்கள் கருத்துக் கூற விரும்பவில்லை. பேச்சுவார்த்தைக்கு நடுவேதான் இது நடந்துள்ளது. பேச்சுவார்த்தை இன்னும் முடியவில்லை. எனவே இந்த சமயத்தில் பத்திரிகைக் கருத்துக்கள் மூலம் எதையும் தெரிவிக்க விரும்பவில்லை. அது குழப்பத்தை அதிகரிக்கவே செய்யும்.

திமுகவின் முடிவு அதிகாரப்பூர்வமாக எங்களுக்கு வரவில்லை. வந்த பிறகுதான் அதுகுறித்துப் பேச முடியும் என்றார் அவர்.

English summary
The DMK's decision to pull out of the UPA Government appears to have come as a bolt from the blue for the Congress, which still feels all is not lost and negotiations could continue. Party spokesperson Abhishek Manu Singhvi gave a guarded reaction on the development, keeping alive the hopes of a settlement on seat sharing even at this stage. "There is no need to comment on it now. This (has happened) in the middle of negotiations and unnecessary press comments will muddy the waters," was the refrain of Singhvi. Indicating that the party has been caught off-guard on the issue, a senior party functionary, who did not wish to be identified, said, "We are not going to react until the DMK officially communicates to us the decision."
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X