For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பணத்தை வாரி இறைக்கும் தொகுதிகளில் கூடுதல் கண்காணிப்பு!

Google Oneindia Tamil News

Coimbatore Junction
நெல்லை: தமிழகத்தில் பணம் பெருமளவில் வாரியிறைத்து செலவிடப்படும் தொகுதிகள் எவை என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. இவற்றை செலவு மிகுந்த சென்சிட்டிவ் தொகுதிகள் என பிரித்து அங்கு தீவிர கண்காணிப்பை தேர்தல் ஆணையம் மேற்கொள்ளவுள்ளதாம்.

தமிழகத்தில் ஏப்ரல் 13ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தேர்தல் நடத்தை விதிகள் கடுமையாக பின்பற்றப்படுகின்றன.

தேர்தலில் பணபுழகத்தை கட்டுபடுத்தவும், வாக்காளர்கள் பணம், பரிசுகள் வினியோகிப்பை தடுக்கவும் பல்வேறு கண்காணிப்பு குழுக்கள் ஈடுபடுத்தப்படுகின்றன.

நாட்டில் முதன்முறையாக இந்த தேர்தலில் வருமான வரிதுறை, கலால் துறையினர் முழு வீச்சில் தேர்தல் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முறைகேடுகளை தடுக்க மாவட்ட தேர்தல் பிரிவு, செலவு கண்காணிப்பு பிரிவு, போலீஸ், வருமான வரிதுறை என பல்வேறு அலுவலகங்களில் கட்டுபாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன.

சட்டம் ஓழுங்கு பிரச்சனை ஏற்பட கூடிய தொகுதிகளை பதற்றம் நிறைந்தவையாக கண்டறிந்து தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதேபோல் செலவு அதிகமாக செய்யப்படும் தொகுதிகளை செலவு மிகுந்த சென்சிடிவ் தொகுதி என வைப்படுத்தி கண்காணிப்பை தீவிரபடுத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் முதல் கட்டமாக செலவு மிகுந்த தொகுதிகளை கண்டறியும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தமிழகத்தில் 30 தொகுதிகள் அடங்கிய தோராய பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

அதில் கடந்த 5 ஆண்டுகளுக்குள் இடைதேர்தல் நடந்த திருமங்கலம், திருச்செந்தூர், பர்கூர், தொண்டமுத்தூர், இளையன்குடி உள்ளிட்ட தொகுதிகளும், மேற்கு மாவட்டங்களில் கோவை தெற்கு, கோவை வடக்கு, ஈரோடு கிழக்கு, திரு்ப்பூர் தெற்கு, திருப்பூர் வடக்கு, பல்லடம், உடுமலைப்பேட்டை, சூலூர், கோபிசெட்டிபாளையம் ஆகிய தொகுதிகளும் இடம் பெற்றுள்ளன.

இங்கெல்லாம் வரும் தேர்தலின்போது மிகக் கடுமையான கண்காணிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாம்.

English summary
EC has ordered to have additional vigilance in costly constituencies. EC has listed out of 30 constituencies, which will put under EC scanner.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X