For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காங்கிரசுக்கு தொகுதிகளை விட்டுத் தர மறுத்த பாமக

Google Oneindia Tamil News

சென்னை: காங்கிரஸுக்காக தங்களது தொகுதிகளிலிருந்து எதையும் விட்டுத் தர மாட்டோம் என்று பாமக தரப்பிலிருந்து திமுகவுக்கு இன்று பகலில் தகவல் தரப்பட்டது.

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி 63 தொகுதிகளை தொடர்ந்து பிடிவாதமாக கேட்டு வந்தது. இதையடுத்து பாமகவிடமிருந்து சில தொகுதிகளை காங்கிரஸுக்காக திமுக கேட்டுப் பெறலாம் என்று கூறப்பட்டது. இதற்கு பாமக சம்மதிக்கும் என்றும் கூறப்பட்டது.

ஆனால் பாமக தரப்போ, தங்களுக்கு 31 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவை எங்களிடம்தான் உள்ளன. அதை யாரும் கேட்கவில்லை, கேட்க மாட்டார்கள் என்று எதிர்பார்க்கிறோம். அதைக் கொடுக்கும் திட்டமும் எங்களிடம் இல்லை என்று கூறியது.

இந் நிலையில் இரவில் திமுக, பாமக, இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் தலா ஒரு தொகுதியை விட்டுத் தந்து காங்கிரசுக்கு மொத்தமாக 63 இடங்களைத் தருவது என்று முடிவு செய்யப்பட்டது.

திமுகவும் விட்டுத் தந்துவிட்டதால் பாமகவும் இந்த யோசனையை ஏற்றுக் கொள்ளும் என்றே தெரிகிரது.

English summary
PMK may not concede any seats to Congress, it seems. A PMK leader has said that, we have been allotted 31 seats by DMK. Those seats are with us. No one has asked to give some of the seats to Congress. We hope nobody will ask the same, they said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X