For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தலைவர்களின் தேர்தல் பிரசாரத்திற்கு வாகனங்கள் தயார்

Google Oneindia Tamil News

கோவை: தமிழக தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. தலைவர்களை தாங்கிக் கொண்டு பிரசார வலம் வர நவீன வசதிகளுடன் கூடிய வேன்களும், மினி பஸ்களும் தயாராகி விட்டன.

இன்னும் சில நாட்களில் தொகுதிப் பங்கீடு, தொகுதிகள் ஒதுக்கீடு போன்றவற்றை முடிக்கவுள்ளன அரசியல் கட்சிகள். மார்ச் 19ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. இதைத் தொடர்ந்து தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்கும்.

தலைவர்களின் பிரசாரத்தில் முக்கியப் பங்கு வகிப்பது நவீன வசதிகள் கொண்ட வேன்கள்தான். அந்த வகையில் முக்கியத் தலைவர்களின் பிரசாரத்திற்கான வேன்கள் தயாராகி விட்டன.

தற்போதெல்லாம் தலைவர்கள் தொடர்ந்து வேன்களிலேயே தமிழகம் முழுவதும் சுற்றி வர வேண்டியிருப்பதால் அதி நவீன வசதிகளுடன் கூடிய வேன்களைத்தான் தலைவர்கள் பயன்படுத்துகின்றனர்.

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இந்த முறை மீண்டும் டெம்போ டிராவலரிலேயே தேர்தல் பிரசாரத்திற்குச் செல்லவுள்ளார். இந்த வேன் நவீன வசதிகளுடன் தயாராகி வருகிறது. வெள்ளை நிற டெம்போ டிராவலர் வேனான இதில், ஆடியோ வசதி, இரண்டு ஒலிபெருக்கிகள், கூடுதல் ஸ்பாட் லைட்டுகள் (பிரகாசமான விளக்குகள்), ஹைட்ராலிக் லிப்ட் (வேனுக்குள் இருந்தபடி வேனுக்கு மேலே நின்றபடி பேசுவதற்காக) வசதிகள் இந்த வேனில் இடம் பெற்றுள்ளன. வேனுக்குள் உட்கார்ந்தபடி அனைவரையும் திரும்பிப் பார்த்து பேசுவதற்காக வசதியாக, வேனில் ரிவால்விங் சேர் ஒன்றும் பொருத்தப்பட்டுள்ளது.

வேனுக்குள் ஜெயலலிதாவைத் தவிர மேலும் நான்கு பேர் அமரக் கூடிய வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாம். இது போக வேனுக்குள் ஒரு கழிப்பறையும், வாஷ் பேசினும் கூட இடம் பெற்றுள்ளது. இவ்வளவு வசதிகளுடன் கூடியதாக இந்த வேனை மாற்ற ரூ. 5 முதல் ரூ.10 லட்சம் வரை செலவாகும் என்று கூறப்படுகிறது.

ஜெயலலிதாவின் பிரசார வேன் தற்போது கோவையில் உள்ள கோயாஸ் என்ற வேன்களுக்கான பணிமனையில் தயாராகிக் கொண்டிருக்கிறது. இவர்கள் பிரசார வேன்களை வடிவமைத்து, புதுப்பித்துக் கொடுப்பதில் நிபுணர்களாம்.

சிறிய அளவிலான மாடுலார் கிச்சன், பிரிட்ஜ், மைக்ரோவேவ், ஹோம் தியேட்டர், டிஷ் டிவி, டாயல்லட் என அனைத்து வசதிகளும் இந்த வேனில் இடம் பெறும் என்கிறார் இந்த நிறுவனத்தின் அதிபரான ரியாஸ்.

இந்த நிறுவனத்தில்தான் கடந்த 1980ம் ஆண்டு முன்னாள் பிரதமர் வாஜ்யாப் தனது இரண்டு அம்பாசடர் கார்களைக் கொடுத்து பிரசாரத்திற்கேற்றபடி புதுப்பித்துக் கொண்டாராம். அப்போது முதல் இந்த நிறுவனம் பிரபலமாகத் தொடங்கியது.

இவர்கள் போக முதல்வர் கருணாநிதி, மறைந்த கேரள முன்னாள் முதல்வர் கருணாகரன், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தேமுதிக தலைவர் விஜயகாந்த், தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு ஆகியோருக்கும் இங்குதான் வேன்கள் புதுப்பித்துக் கொடுக்கப்படுகிறதாம்.

English summary
With one month left for Tamil Nadu Assembly polls, a campaign vehicle fitted with hydraulic lift, is being given finishing touches in a upholstery and car acceessories workshop in Coimbatore for ADMK leader Jayalalithaa. The vehicle, a white tempo traveller, has a built-in-audio system, with two loud speakers and additional spotlights and hydraulic lift would help Jayalalithaa to get her on top of the vehicle to address the crowd, according to P V Riyas, one of the partners of the workshop Koyas. Koyas's customer list is very big, including CM Karunanidhi, M K Stalin, Dr. S Ramadoss, DMDK chief Vijayakanth and K V Thangkabalu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X