For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திமுக, அதிமுக, தேமுதிக, சிபிஎம் சார்பில் 27 பெண் வேட்பாளர்கள் போட்டி

By Siva
Google Oneindia Tamil News

Leema Rose
சென்னை: வரும் சட்டசபை தேர்தலில் திமுக, அதிமுக, தேமுதிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் சார்பில் 27 பெண் வேட்பாளர்கள் களம் இறங்குகின்றனர். பாமக, விடுதலை சிறுத்தைகள் வேட்பாளர் பட்டியல்களில் பெண் வேட்பாளர்கள் பெயர் இல்லை.

119 தொகுதிகளி்ல் போட்டியிடும் திமுகவில் 11 பேர் பெண் வேட்பாளர்களும், 160 தொகுதிகளில் களமிறங்கும் அதிமுகவில் 12 பேர் பெண் வேட்பாளர்களும், தேமுதிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் தலா 2 பெண் வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.

திமுகவின் பெண் வேட்பாளர்கள் விவரம் வருமாறு,

1. பொன்னேரி (தனி)- மணிமோகலை
2. மாதவரம்- டாக்டர் கனிமொழி
3. துறையூர் (தனி)- பரிமளாதேவி
4. தாராபுரம் (தனி)- ஜெயந்தி
5. பவானிசாகர் (தனி)- லோகேஸ்வரி
6. மேலுர்- ராணி ராஜமாணிக்கம்
7. மானாமதுரை (தனி)- தமிழரசி ரவிக்குமார்
8. சங்கரன்கோவில்(தனி)- உமாமகேஸ்வரி
9. ஆலங்குளம்- பூங்கோதை ஆலடி அருணா
10. தூத்துக்குடி- கீதாஜீவன்
11. பத்மநாபபுரம்- டாக்டர் புஷ்பலீலா ஆல்பன்

அதிமுக சார்பில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் விவரம்,

1. ஸ்ரீரங்கம்- ஜெயலலிதா
2. ஆயிரம்விளக்கு- வளர்மதி
3. அண்ணாநகர்- கோகுல இந்திரா
4. மயிலாப்பூர்- ராஜலட்சுமி
5. மதுராந்தகம் (தனி)- கனிதா சம்பத்
6. ஊத்தங்கரை (தனி)- மனோரஞ்சிதம்
7. போளூர்- ஜெயசுதா லட்சுமிகாந்தன்
8. கள்ளக்குறிச்சி (தனி)- அழகுவேல் பாபு
9. சங்ககிரி- விஜயலட்சுமி பழனிச்சாமி
10. துறையூர் (தனி)- இந்திராகாந்தி
11. புவனகிரி- செல்வி ராமஜெயம்
12. சீர்காழி- சக்தி

தேமுதிகவின் 2 பெண் வேட்பாளர்கள் விவரம்,

1.சேந்தமங்கலம்- சாந்தி ராஜமாணிக்கம்
2.கெங்கவல்லி- சுபா

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2 பெண் வேட்பாளர்கள்,

1. விளவங்கோடு-லீமா ரோஸ்
2. திண்டுக்கல்-பாலபாரதி

English summary
25 women candidates from DMK, ADMK and DMDK are contesting in the assembly election. In this DMK has 11, ADMK has 12 and DMDK has 2 women candidates.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X