For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜப்பானில் இன்று மீண்டும் நிலநடுக்கம்-சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது

Google Oneindia Tamil News

நியூயார்க்: ஜப்பானின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் இன்று காலை மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் சுனாமி அலைகள் எழ வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டது.

இந்த நிலநடுக்கத்தின் அளவு 6.5 ரிக்டர் என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு அளவு குறித்து உடனடியாக தெரியவில்லை. ஹோன்ஷு மாகாணத்தில் உள்ள புகுஷிமாவின் வட கிழக்கில் இந்த பூகம்பம் ஏற்பட்டது. ஜப்பானிலிருந்து 368 கிலோமீட்டர் தொலைவில் இது உள்ளது.

சுனாமி எச்சரிக்கை தற்போதைக்கு ஜப்பானுக்கு மட்டும் விடப்பட்டுள்ளது. அதேசமயம், பிற பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை. இந்த பூகம்பம் காரணமாக மியாகி மாகாணத்தில், 50 சென்டிமீட்டர் உயரத்திலான சுனாமி அலைகள் எழும்என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. கடந்த பூகம்பம் மற்றும் சுனாமியில் மியாகி மாகாணம் பெரும் சீரழிவை சந்தித்தது நினைவிருக்கலாம்.

மார்ச் 11ம் தேதி ஜப்பானைத் தாக்கிய கடும் பூகம்பம் மற்றும் அதைத் தொடர்ந்து தாக்கிய பெரும் சுனாமிக்கு 20 ஆயிரம் பேர் வரை உயிரிழந்தது நினைவிருக்கலாம்.

இந்த பூகம்பத்திற்குப் பின்னர் அவ்வப்போது சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஜப்பானைத் தாக்கி வருகின்றன.

English summary
An earthquake of magnitude 6.5 hit off the east coast of Japan on Monday morning, triggering a local tsunami warning. According to the U.S. Geological Survey (USGS), the earthquake occurred at about 7:23 a.m. local time Monday. The epicenter was some 161 km east- northeast of Fukushima, Honshu, and 368 km northeast of Tokyo. A 50-cm tsunami warning was issued by the Japan Meteorological Agency for the Pacific coast of Miyagi Prefecture.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X