For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஏழ்மையைச் சமாளிப்பதில் இந்தியா 'பலே'! - உலக வங்கி பாராட்டு

By Shankar
Google Oneindia Tamil News

Poverty
வாஷிங்டன் : வளர்ந்து வரும் நாடுகளில் நிலவும் ஏழ்மை, பட்டினிப் பிரச்சினையைச் சமாளித்து வளர்ச்சி இலக்கை எட்டும் நாடுகளுள் இந்தியா முன்னிலை வகிக்கிறது, என உலக வங்கி பாராட்டியுள்ளது.

இது தொடர்பாக, உலக வங்கி மற்றும் ஐஎம்எப் மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள் கூறுவதாவது:

உலகில் வளர்ந்து வரும் நாடுகளில், மூன்றில் இரண்டு பங்கு நாடுகள், ஏழ்மை மற்றும் பட்டினியை நன்றாக சமாளித்து, வளர்ச்சி இலக்கை அடைந்து வருகின்றன. குறிப்பாக இந்தியா, சீனா போன்றவை நல்ல வளர்ச்சி பெற்றுள்ளன. ஏழ்மையை ஒழிப்பதில் நல்ல முன்னேற்றமும் கண்டுள்ளன.

தரமான பொருளாதார கொள்கைகள், விரைவான வளர்ச்சி போன்றவை காரணமாக 2015ம் ஆண்டிற்குள் இந்த நாடுகள் இன்னும் நல்ல வளர்ச்சியை எட்டும்.

உலகில் ஒரு நாளைக்கு 56 ரூபாய்க்கும் குறைவான வருமானத்தில் வசிப்பவர்களின் எண்ணிக்கை, 2005ல், 140 கோடியாகவும், 1990ல், 180 கோடியாகவும் இருந்தது.

இந்த எண்ணிக்கை 2015 ல், 88 கோடியே 30 லட்சமாக இருக்கும். இதனைப் பாதியாகக் குறைப்பதுதான் உலகின் இப்போதைய சவால்.

வளர்ந்து வரும் நாடுகளில், கல்வியிலும் ஆண், பெண் பாரபட்சம் குறைந்து வருகிறது. பாதுகாப்பான குடிநீர் பிரச்சினை நன்கு சமாளித்துள்ளன இந்த நாடுகள். வறுமையை முற்றிலும் ஒழிக்கும் நிலையை, பலநாடுகள் அடைந்துள்ளன. அதேநேரத்தில், இந்த நாடுகளில், 45 சதவீத அளவுக்கு சுகாதார பிரச்னை உள்ளன. பேறு கால இறப்பு வீதம் 39 சதவீதமாகவும், குழந்தைகள் இறப்பு விகிதம் 38 சதவீதமாகவும் உள்ளன," என்று அந்த ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

English summary
Two-thirds of developing countries are on track or close to meeting key targets for tackling extreme poverty and hunger, with India and China making significant progress on the issue, World Bank and IMF have said. With improved policies and faster growth, these countries can still achieve the targets in 2015 or soon after, the IMF and World Bank said in its report titled "Global Monitoring Report 2011: Improving the Odds of Achieving the MDGs"
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X