For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஏழை மாணவியின் கல்விக்கு உதவிய கோவை கமிஷனர் சைலேந்திரபாபு

By Siva
Google Oneindia Tamil News

கோவை: மேற்படிப்பு படிக்க வசதி இல்லாத ஏழை மாணவிக்கு கோவை போலீஸ் கமிஷனர் சைலேந்திர பாபு உதவினார்.

ஏழை மாணவி

கோவை சாயிபாபா காலனியைச் சேர்ந்த 17 வயது மாணவி நேற்று கோவை கமிஷனர் சைலேந்திர பாபுவை சந்தித்தார். சிறிய ஆட்டு இறைச்சி கடை நடத்தி வரும் தன் தந்தையால் தன்னை தொடர்ந்து படிக்க வைக்க இயலவில்லை என்றும், அதனால் தன் கல்விக்கு உதவும்படியும் அவர் கமிஷனரை கேட்டுக்கொண்டார்.

உதவிய கமிஷனர்

இதனை அடுத்து கோவை ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியை கமிஷனர் தொடர்பு கொண்டு பேசி மாணவியின் ஏழ்மை நிலையை விளக்கினார். கல்லூரி நிர்வாகம் மாணவியை இளங்கலை கணிணி அறிவியல் வகுப்பில் சேர்த்துக் கொள்வதாகவும், கல்விக் கட்டணத்திலும் 50% தள்ளுபடி வழங்குவதாகவும் உறுதி அளித்தது. இதனைத் தொடர்ந்து தன் நண்பர்களிடத்தில் நிதி திரட்டிய கமிஷனர் மாணவியிடம் ரூ.30 ஆயிரம் ரொக்கத்தை வழங்கினார்.

English summary
Coimbatore police commissioner Sylendra babu has helped a poor girl to pursue her studies. He has given her Rs. 30, 000 cash apart from helping her to join a college at a concession rate.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X