For Daily Alerts
Just In
கிளிநொச்சி: தெருவுக்கு ராஜபக்சே பெயர்: மேலும் பல தெருக்களுக்கு சிங்கள பெயர்கள்
கொழும்பு: இலங்கையின் வடக்குப் பகுதியில் கிளிநொச்சியில் ஒரு தெருவுக்கு அதிபர் ராஜபக்சேவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
ஜெயபுரம் பகுதியில் சந்தைக்கு மிக அருகில் உள்ள தெருவுக்கு அவரகு பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தத் தெருவில் நிறுவப்பட்டுள்ள புதிய பெயர்ப் பலகைக்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
அந்தப் பகுதியில் உள்ள மேலும் பல தெருக்களுக்கும் சிங்களப் பெயர்களை சூட்ட அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது. இந்தத் தெருக்களிலும் பெயர்ப் பலகைகளுக்கு 24 மணி நேர ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு போடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.