For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

3 மாவட்ட தேமுதிக முக்கிய நிர்வாகிகள் திடீர் நீக்கம்: விஜயகாந்த் அதிரடி

By Siva
Google Oneindia Tamil News

மதுரை: திருவாரூர், கடலூர், தூத்துக்குடி மாவட்ட தேமுதிக முக்கிய நிர்வாகிகள் திடீர் என்று கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றிய செயலாளர் முருகானந்தம், மன்னார்குடி ஒன்றிய செயலாளர் ஜெயபால், மன்னார்குடி நகர செயலாளர் மணிமாறன் ஆகியோர் கட்சிப் பொறுப்பில் நீக்கப்படுகின்றார்கள்.

அதே போன்று கோவை தெற்கு மாவட்டம் பொள்ளாச்சி நகர செயலாளர் சி.பி.ரமேஷ்குமார், பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய செயலாளர் நித்தியானந்த சரவணன், நெல்லை பகுதி செயலாளர் எஸ்.என்.முத்துக்குமார், தச்சநல்லூர் பகுதி செயலாளர் கே.ஏ.எம்.சிவா, ஈரோடு நகர முதலாவது வார்டு செயலாளர் செந்தில் என்ற விஸ்வநாதன், 41-வது வார்டு செயலாளர் பாண்டியன், துணை செயலாளர் பிரபு, ஈரோடு வடக்கு மாவட்ட அவைத் தலைவர் மனோகர், மாவட்ட பொருளாளர் வி.பி. பெரியசாமி ஆகியோர் அவரவர்கள் வகித்து வந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.

மேலும், கடலூர் தெற்கு மாவட்டம் மாநில பட்டதாரி ஆசிரியர் அணி துணை செயலாளர் பூ.ராஜமன்னன், கீரப்பாளையம் ஒன்றிய செயலாளர் எஸ். ஸ்டாலின், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கலை இலக்கிய அணி செயலாளர் வி.எல். பாபு, நீலகிரி மாவட்டம் கூடலூர் ஒன்றிய செயலாளர் கேப்ரியல், மாவட்ட துணை செயலாளர் இஸ்மாயில்
ஆகியோர் அவர்கள் வகித்து வந்து பதவியில் இருந்து நீக்கி வைக்கப்படுகின்றார்கள்.

அதே போல தூத்துக்குடி வடக்கு மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் அழகர்சாமி, மாவட்ட கேப்டன் மன்ற துணை செயலாளர் பெருமாள்சாமி, மாவட்ட பொறியாளர் அணி துணை செயலாளர் சுப்பையா என்ற சுரேஷ், காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் ஆலந்தூர் நகர செயலாளர் ஜெயராம் மார்த்தாண்டன் ஆகியோர் அவர்கள் வகித்து வந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள். இந்த ஆணை உடனடியாக அமலுக்கு வருகிறது.

இவ்வாறு விஜயகாந்த் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

ஆனால் அவர்களை கட்சியில் இருந்து நீக்குவதற்குரிய காரணத்தை அவர் விரிவாக விளக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
DMDK chief Vijayakanth has dismissed many of his party functionaries suddenly. He has just announced that he is dismissing some of the functionaries but doesn't explain the reason.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X