For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு தீவிரவாதத்தை நசுக்க வேண்டும்- பிரதமர்

Google Oneindia Tamil News

Manmohan Singh
டாக்கா: டெல்லி உயர்நீதிமன்ற வளாகத்தில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவம் கடும் கண்டனத்துக்குரியது. அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து தீவிரவாதத்தை நசுக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

வங்கதேசம் சென்றுள்ள பிரதமர் மன்மோகன் சிங், டெல்லி உயர்நீதிமன்ற குண்டுவெடிப்புச் சம்பவத்தைக் கண்டித்து அறிக்கை விட்டுள்ளார்.

அதில் அவர் கூறுகையில், இந்த சம்பவம் கடும் கண்டனத்துக்குரியது. இது மிகவும் கோழைத்தனமான ஒன்று. தீவிரவாதிகளின் இந்த சதிச் செயலுக்கு யாரும் பலியாகி விடக் கூடாது.

அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் ஒருங்கிணைந்து தீவிரவாதத்தை அடியோடு நசுக்க வேண்டும். நாம் அனைவரும் ஒன்றாக இருக்கிறோம் என்பதே தீவிரவாதிகளுக்கு நாம் தரும் சரியான பதிலடியாக இருக்க முடியும்.

நாட்டு மக்கள் அனைவரும் அமைதியுடனும், பொறுமையுடனும் இருந்த இந்த சவாலை சந்திக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார் பிரதமர்.

English summary
PM Manmohan Singh has urged all political parties should unite and crush the terrorism. He has condemned the Delhi HC blast incident. And called the people to be united and patient to takcle the terror menace. He dubbed the Delhi blast as a cowardly act.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X