For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வேலூர் சிறையில் நளினி - முருகன் சந்திப்பு... 30 நிமிடம் பேசினர்!

By Shankar
Google Oneindia Tamil News

Murugan and Nalini
வேலூர்: ராஜீவ் கொலையாளி முருகனை அவரின் மனைவி நளினி இன்று வேலூர் சிறையில் சந்தித்துப் பேசினார். போலீசார் முன்னிலையில் சுமார் 20 நிமிடங்கள் அவர்கள் சந்தித்துப் பேச அனுமதிக்கப்பட்டது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் வேலூர் சிறையில் உள்ளனர். அவர்களின் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்ததை தொடர்ந்து அவர்களை தூக்கிலிடுவதற்கான தேதி குறிக்கப்பட்டது.

இதனிடையே சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர்கள் சார்பில் தண்டனையை குறைக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. தூக்குத் தண்டனையை 4 வாரத்திற்கு நிறுத்தி வைக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

தமிழக சட்டசபையிலும் தண்டனையை குறைக்க மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஏற்கனவே இந்த வழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற முருகனின் மனைவி நளினிக்கு தண்டனை குறைக்கப்பட்டு ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது.

சிறை விதிகளை மீறி செயல்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் நளினி. இந்த நிலையில் நளினி சில தினங்களுக்கு முன்பு வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார். பெண்கள் தனிப்பிரிவில் அடைக்கப்பட்டார்.

இன்று காலை 7.45 மணிக்கு கணவர் முருகன் வேலூர் மத்திய சிறையிலிருந்து அதன் எதிரே உள்ள பெண்கள் சிறைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறை வார்டன் முன்பு நளினியை முருகன் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு 30 நிமிட நேரம் நடைபெற்றது. பின்னர் பாதுகாப்புடன் முருகன் வேலூர் மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

முருகனின் கருணை மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் கணவன் - மனைவிக்கு இடையே இந்த உருக்கமான சந்திப்பு நடைபெற்றுள்ளது.

அவர் கடைசியாக சென்ற வருடம் முருகனைச் சந்தித்துப் பேசினார்.

English summary
Nalini and her husband Murugan, prime accused in Rajiv Gandhi murder have met today at Vellore Prison after a gap of one year. They were allowed to speak 30 minutes in front of the jail warden.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X