செப்டம்பர் 27ம் தேதி உள்ளாட்சித் தேர்தலுக்கான அனைத்து கட்சி கூட்டம்
Subscribe to Oneindia Tamil
மதுரை: உள்ளாட்சித் தேர்தல் குறித்து அனைத்து அரசியல் கட்சி கூட்டம் வரும் 27ம் தேதி நடக்க உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல்கள் வரும் அக்டோபர் 17 மற்றும் 19ம் தேதி ஆகிய தேதிகள் என 2 கட்டங்களாக நடக்க உள்ளது. இதையடுத்து, உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டம் வரும் 27ம் தேதி நடக்க உள்ளது.
உள்ளாட்சித் தேர்தல் நன்னடத்தை விதிகள் முறையாகவும், முழுமையாகவும் செயல்படுத்துவது குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் கலந்து ஆலோசனை நடத்த மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
தேர்தலை நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடத்த உதவும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை விவாதிக்க காவல்துறை உயர் அலுவலர்கள் ஆலோசனை கூட்டம் செப்டம்பர் 26ம் தேதி நடக்க உள்ளது.
இவ்வாறு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications