பிரெஞ்சு அதிபர் சர்கோஸி மனைவி கார்லா புரூனிக்கு பெண் குழந்தை பிறந்தது!

இந்தக் குழந்தை சர்கோஸிக்கும், கார்லாவுக்கும் பிறந்துள்ள முதல் குழந்தையாகும். அதேசமயம் கர்லாவுக்கு முதல் கணவர் மூலம் ஒரு10 வயது மகன் உள்ளான். சர்கோஸிக்கு முதல் மனைவி மூலம் 13 முதல் 26 வயது வரையிலான 3 குழந்தைகள் உள்ளனர். அப்படிப் பார்த்தால் இது கார்லாவுக்கு 2வது குழந்தை, சர்கோஸிக்கோ 4வது குழந்தையாகும்.
பாரீஸில் உள்ள லா மியூட் கிளினிக்கில்தான் பிரசவம் நடந்துள்ளது. பிரெஞ்சு நேரப்படி இரவு 7 மணி முதல் ஏழரைக்குள் குழந்தை பிறந்ததாம். அனைத்தும் நல்லபடியாக நடந்ததாக தகவல்கள் கூறுகின்றன. தாயும், சேயும் நலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தை பிறந்த தகவல் பிராங்க்பர்ட் நகரில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த சர்கோஸிக்குத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர் விரைந்து வந்தார். இரவு பத்தரை மணியளவில் அவர் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தார். அதன் பின்னர் மனைவியையும், குழந்தையையும் அவர் பார்த்தார்.
குழந்தைக்கு என்ன பெயர் சூட்டப்பட்டுள்ளது என்பது குறித்து மருத்துவமனை நிர்வாகமோ, சர்கோஸி அலுவலகமோ தெரிவிக்கவில்லை.
2008ம் ஆண்டு சூப்பர் மாடல் அழகியான கார்லாவுக்கும், சர்கோஸிக்கும் திருமணம் நடந்தது. சர்கோஸி மூன்றுமுறை திருமணம் செய்தவர். கார்லாவுக்கு இது 2வது திருமணமாகும்.
முன்னதாக நேற்று காலை மருத்துவமனைக்கு வந்த சர்கோஸி தனது மனைவியுடன் அரை மணி நேரம் செலவிட்டார். இருப்பினும் ஜெர்மனியின் பிராங்பர்ட் நகரில் யூரோஜோன் தொடர்பான கூட்டத்தில் பங்கேற்க வேண்டியிருந்ததால் அவர் கிளம்பிச் சென்று விட்டார்.
பிரசவத்திற்குப் பின்னர் மனைவியை வந்து பார்த்த சர்கோஸி ஒரு மணி நேரம் மருத்துவமனையில் இருந்தார். பின்னர் நள்ளிரவுவாக்கில் வெளியேறினார். வெளியே திரண்டிருந்த செய்தியாளர்களிடம் அவர் பேசவில்லை.
பிரெஞ்சு அதிபராக இருக்கும் ஒருவர், பதவியில் இருக்கும்போது அப்பாவாவது பிரான்ஸ் வரலாற்றில் இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications