For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் தீபாவளி கொண்டாட்டத்தை பாதித்த கன மழை!

By Chakra
Google Oneindia Tamil News

சென்னை: கன மழை காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் தீபாவளி பண்டிகைக் கொண்டாட்டங்கள் பாதிக்கப்பட்டன.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 4 நாட்கள் தாமதமாக கடந்த 24ம் தேதி தொடங்கியது. இதையடுத்து வங்கக்கடலில், ஆந்திராவை ஒட்டியுள்ள பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி தமிழகம் முழுவதும் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது.

இதனால் நேற்று தீபாவளி பண்டிகையும் கொஞ்சம் பாதிக்கப்பட்டது. கன மழையால் சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் பட்டாசு, உடைகள் விற்பனையும் பாதிக்கப்பட்டது. கடைசி நேர ஷாப்பிங் செய்யத் திட்டமிட்டிருந்தவர்களை மழை வீடுகளிலேயே முடங்கச் செய்தது.

மேலும் தொடர்ந்து மழை பெய்ததால் பட்டாசு வெடிப்பது கூட பாதிக்கப்பட்டது.

தமிழகத்திலேயே அதிகபட்சமாக திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை, தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் மற்றும் கொடைக்கானலில் தான் 9 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. அடுத்தபடியாக மாமல்லபுரத்தில் தான் மிக அதிகபட்சமாக 150 மி.மீ. மழை பதிவானது.

அதே போல மணிமுத்தாறு, ஸ்ரீவைகுண்டத்தில் 110 மி.மீயும், கடலூர், தொண்டியில் 90 மி.மீயும், சென்னை, காரைக்கால், திருச்செந்தூரில் 80 மி.மீயும், நாகப்பட்டிணம், சீர்காழி, சாத்தான்குளம் ஆகிய இடங்களில் 60 மி.மீயும், செஞ்சி, கள்ளக்குறிச்சி, பாம்பன், ராமேஸ்வரம், அம்பாசமுத்திரம், தூத்துக்குடி, ஆரணி, குடியாத்தம் ஆகிய இடங்களில் 50 மி.மீயும், ஸ்ரீபெரும்புதூர், சிதம்பரம், சேரன்மாதேவி, நாங்குநேரி, பாப்பிரெட்டிபட்டியில் 40 மி.மீயும் மழை பெய்தது.

கன மழையால் சென்னை நகரத்தின் பல பகுதிகள் வெள்ளக்காடாயின. சுரங்கப் பாதைகள் அனைத்திலும் மழை நீர் நிரம்பிவிட்டன.

இந்த மழை தொடர்ந்து நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் தெரிவித்தார். அவர் கூறுகையில், வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, மன்னார் வளைகுடாவில் இருந்து, ஆந்திராவை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதி வரை நிலை கொண்டுள்ளது. இந்தக் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள் மாவட்டங்களிலும் மழை பெய்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்துக்கு தமிழகத்தில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும் என்றார்.

வடகிழக்கு பருவமழை மூலம் ஆண்டுதோறும் தமிழகத்துக்கு சராசரியாக 43 சென்டி மீட்டர் மழை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Heavy rains lashed many parts of Tamil Nadu as a trough of low pressure extending from Gulf of Mannar to Andhra Pradesh today brought copious rains to various districts in the state.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X