For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆன்லைனில் போதைப்பொருள் விற்பனை: 12,000 பேர் கைது,300 கிலோ போதைப்பொருள் பறிமுதல்

Google Oneindia Tamil News

பீஜிங்: சீனாவில் ஆன்லைன் மூலமாக போதைப் பொருள் விற்பனை செய்த 12,125 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 300 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சீனாவின் லான்ஜூ மற்றும் ஜியன் நகரில் ஆன்லைன் மூலம் போதைப் பொருள் விற்பனை அமோகமாக நடக்கிறது என்று போலீசாருக்கு கடந்த செப்டம்பர் மாதம் ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் இன்டர்நெட் சென்டர்களை நோட்டமிடத் தொடங்கினர். அங்கு ஆன்லைனில் குறிப்பிட்ட இணையதளங்கள் மூலம் போதைப் பொருள் விற்பனை செய்பவர்களை கைது செய்யத் துவங்கினர்.

இதுவரை சுமார் 12,125 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 300 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த குற்றத்திற்கு குறிப்பிட்ட இணையதளங்கள் பொறுபேற்க வேண்டும் என்று சீன செய்தி நிறுவனமான ஜிங்குவா தெரிவித்துள்ளது.

English summary
China police have arrested 12,125 persons for selling drugs through specific websites. Police have confiscated more than 300 kg of drugs. Drug peddling has become a headache for the police.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X