For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெட்ரோல் விலை மீண்டும் ரூ 1.82 உயர்கிறது!

By Shankar
Google Oneindia Tamil News

Petrol Bunk
டெல்லி: பெட்ரோல் விலையை மீண்டும் உயர்த்துகின்றன எண்ணெய் நிறுவனங்கள்.

எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ 1.82 உயர்த்த முடிவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன

கச்சா எண்ணெயின் விலை ஏற்றம் மற்றும் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி போன்ற காரணங்களால் விலை உயர்வு செய்யப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் அளித்துள்ளன.

முதல்கட்டமாக இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பொரேஷனும், அதைத் தொடர்ந்து மற்ற அரசுத் துறை எண்ணெய் நிறுவனங்களும் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளன.

பாகிஸ்தானில் விலைக் குறைப்பு

கச்சா எண்ணெய் விலை உயர்ந்து விட்டதாகக் கூறி இந்திய நிறுவனங்கள் பெட்ரோல் விலையை உயர்த்தியுள்ள நிலையில், பாகிஸ்தான் நாட்டு நிறுவனங்கள் விலையைக் குறைத்துள்ளன. அதற்கு அந்த நாட்டு அரசு கூறியுள்ள காரணம், கச்சா எண்ணை விலை குறைவு என்பதாகும்.

இந்த விலை குறைவு காரணமாக ஆக்டேன் பெட்ரோல் விலை ரூ 5-ம், சாதாரண பெட்ரோல் விலை ரூ 1.54 குறைக்கப்பட்டுள்ளது (இந்திய ரூபாயில் பாதி மதிப்புதான் பாகிஸ்தான் நாட்டு ரூபாய்க்கு. அப்படியும் கூட அந்த நாட்டில் பெட்ரோல் விலை இந்திய ரூபாய் மதிப்பில் ரூ 47 மட்டுமே!).

கச்சா எண்ணெய் விலை குறைவு காரணமாக, அனைத்து வகை பெட்ரோலியப் பொருட்களின் விலையும் லேசாகக் குறைக்கப்படுவதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.

ஆனால் இதே நாளில், கச்சா எண்ணெய் விலை உயர்வால் பெட்ரோல் விலையை உயர்த்துவதுவதாக இந்திய எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

English summary
Sate-owned oil refining and marketing firm, Hindustan Petroleum Corporation Limited (HPCL), said today that it may raise petrol prices up to Rs. 1.82 per liter to cover losses. “We are discussing with other oil marketing companies (OMCs), and will take some time to reach a conclusion on price hike,” said the company.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X