டேங்கர் லாரிகள் திடீர் ஸ்டிரைக்: பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

சென்னை கொருக்குப்பேட்டையில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் இருந்து தினமும் 400-க்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகள் பெட்ரோல், டீசல் மற்றும் எரிப்பொருட்களை தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்லும் பணியில் ஈடுப்பட்டுள்ளன.
இந்த டேங்கர் லாரிகள் 6,000 கிலோ மீட்டர் தூரம் வரை எரி பொருட்களை எடுத்துச் செல்ல இந்தியன் ஆயில் நிறுவனம் அனுமதி அளித்திருந்தது. இந்த நிலையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் 6,000 என்பதை மூவாயிரம் கிலோ மீட்டராக குறைத்தும், தென் மாவட்டங்களுக்கு செல்லும் எரிப்பொருட்களை திருச்சியில் இருந்து அனுப்பவும் ஏற்பாடு செய்து வருகிறது.
இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனத்தின் இந்த திடீர் முடிவால் பாதிக்கப்பட்ட டேங்கர் லாரி உரிமையாளர்கள் நேற்று முன்தினம் மாலை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
"இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் எடுத்துள்ள திடீர் முடிவால் டேங்கர் லாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த புதிய முடிவினை நிர்வாகம் கைவிட்டு முன்பு இருந்த முறைப்படி 6 ஆயிரம் கிலோ மீட்டர் வரை பெட்ரோல் மற்றும் எரிப்பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும். அது வரையில் எங்களுடைய போராட்டம் தொடரும்," என்று அறிவித்துள்ளனர்.
டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தத்தால் பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
எனவே இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிர்வாகத்தினர் டேங்கர் லாரிகள் உரிமையாளர்களிடம் இன்று பேச்சு வார்த்தை நடத்த முடிவு செய்துள்ளனர்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications