For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இன்று முதல் 14ம் தேதி வரை 9 ரயில்கள் தாமதமாக புறப்படும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

Google Oneindia Tamil News

மதுரை: இன்று(11ம் தேதி) முதல் வரும் 14ம் தேதி வரை தொடர்ந்து 4 நாட்களுக்கு 9 ரயில்கள் தாமதமாக புறப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது குறித்து அது வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

சென்னை எழும்பூர் வரும் செந்தூர் எக்ஸ்பிரஸ் திருச்செந்தூரில் இருந்து 5 மணி நேரம் தாமதமாக புறப்படும். சென்னை எழும்பூர் வரும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் திருச்சியில் இருந்து நான்கரை மணி நேரம் தாமதமாக புறப்படும்.

சென்னை எழும்பூரில் இருந்து குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் எழும்பூரில் இருந்து நான்கரை மணி நேரம் தாமதமாக பகல் 12.19 மணிக்கு புறப்படும். சென்னை எழும்பூரில் இருந்து திருச்சி செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ், எழும்பூரில் இருந்து 3 மணி நேரம் தாமதமாக காலை 11.20 மணிக்கு புறப்படும்.

மேல்மருவத்தூரில் இருந்து விழுப்புரம் செல்லும் மேல்மருவத்தூர் பயணிகள் ரயிலும், மறுமார்க்கமாக வரும் ரயிலும் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் சென்னை எழும்பூரில் இருந்து நான்கரை மணி நேரம் தாமதமாக மாலை 5.15 மணிக்கு புறப்படும்.

சென்னை எழும்பூர் வரும் வைகை எக்ஸ்பிரஸ் மதுரையில் இருந்து 2 மணி நேரம் தாமதமாக புறப்படும். திருச்சி செல்லும் பல்லவன் எக்ஸ்பிரஸ் சென்னை எழும்பூரில் இருந்து 2.15 மணி நேரம் தாமதமாக மாலை 6 மணிக்கு புறப்படும்.

திருச்செந்தூரில் இருந்து சென்னை எழும்பூர் வரும் செந்தூர் எக்ஸ்பிரஸ் விழுப்புரத்துக்கு 40 நிமிடங்கள் தாமதமாக வரும். சென்னை எழும்பூரில் இருந்து புதுச்சேரி செல்லும் பயணிகள் ரயில் மயிலத்துக்கு 10 நிமிடம் தாமதமாக வரும்.

சென்னை எழும்பூரில் இருந்து புதுச்சேரி செல்லும் சென்னை எழும்பூர் பயணிகள் ரயில் திண்டிவனம்-புதுச்சேரி இடையே இரு மார்க்கத்திலும் ரத்து செய்யப்படுகிறது. அதே போல திருப்பதியில் இருந்து புதுச்சேரி செல்லும் திருப்பதி பயணிகள் ரயில் இரு மார்க்கத்திலும் மேல்மருவத்தூர்-புதுச்சேரிக்கு இடையே ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

English summary
Southern railways has announced that it has changed the departure time of 9 trains from november 11 to 14. Accordingly, the trains will start late. It has cancelled Chennai Egmore-Puducherry and Melmaruvathur-Villupuram passenger trains.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X