For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பரமக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு சிபிஐ விசாரணை கோரி டெல்லியில் தலித்கள் கண்டன ஆர்பாட்டம்

Google Oneindia Tamil News

Paramakudi
டெல்லி: பரமக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு சிபிஐ விசாரணை கோரி டெல்லியில் தலித் அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

தியாகி இமானுவேல் நினைவு தினத்தன்று பரமக்குடியில் ஏற்பட்ட கலவரத்தின்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் தலித் மக்கள் 6 பேர் உயிர் இழந்தனர். போலீசாரின் இந்த செயலுக்கு தலித் அமைப்புகளைச் சேர்ந்த முன்னணி தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவிந்திருந்தனர்.

இந்த நிலையில் பரமக்குடியில் தேவேந்திர குல மக்கள் மீது தமிழக போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவத்திற்கு சிபிஐ விசாரணை கோரி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தலித் வன்கொடுமை தடுப்பு பிரச்சார இயக்க தலைவர் தலித் பாண்டியன் தலைமையில் காலை 11 மணி 11 நிமிடத்தில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

இதில் டெல்லி தென்னிந்திய முன்னேற்றக் கழக தலைவர் மாரியப்பன், துணைத் தலைவர் தங்கவேல் மற்றும் பல்வேறு தலித் அமைப்புகள் சார்பில் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் இந்த ஆர்பாட்டத்தில் மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவர் ஆகியோரை சந்தித்து மனு அளிப்பது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

English summary
Dalit organizations have staged a protest seeking CBI investigation for Paramakudi shooting incident. They have decided to give petition about this to PM Manmohan Singh and president Pratibha Patil.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X