For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'கல்யாணத்தை' பிடிக்க முடியாமல் திணறல்-உள்ளூர் போலீஸ் ஒத்துழைப்பு இல்லை என புகார்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

விழுப்புரம்: ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய புதுச்சேரி அமைச்சர் கல்யாண சுந்தரத்தை கைது செய்ய முடியாமல் தமிழக போலீசார் திணறிவருகின்றனர். புதுச்சேரி போலீசாரின் ஒத்துழைப்பு கிடைக்காததால் கைது செய்யப்படுவதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

புதுச்சேரியில் கல்வி மற்றும் போக்குவரத்து அமைச்சராக இருந்தவர் கல்யாணசுந்தரம். இவர் கடந்த அக்டோபர் மாதம் திண்டிவனம் தாகூர் மெட்ரிக் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியபோது ஆள்மாறாட்டம் செய்ததாக புகார் எழுந்த்து.

இது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி குப்புசாமி கொடுத்த புகாரின் பேரில் விழுப்புரம் போலீசார் கல்யாண சுந்தரத்தை கைது செய்ய முடிவு செய்தனர். இதனையடுத்து தலைமறைவான கல்யாணசுந்தரம், இவ்வழக்கில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார்.

இதையடுத்து அவரை கைது செய்த உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. இருப்பினும் கடந்த வாரம் அமைச்சர் மீதான முன்ஜாமீன் மனுவை நீதிபதி பழனிவேலு தள்ளுபடி செய்தார்.

போலீசார் திணறல்

முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து விழுப்புரம் போலீசார் அவரை கைது செய்ய முயன்றனர். இதனையறிந்த அமைச்சர் மீண்டும் தலைமறைவனார். சனிக்கிழமையன்று திண்டிவனம் நீதிமன்றத்திலும் அவர் ஆஜராகவில்லை.

இந்த நிலையில் கல்யாண சுந்தரந்தை அமைச்சர் பதவியில் இருந்த நீக்க புதுவை முதலமைச்சர் ரங்கசாமி துணை நிலை ஆளுநருக்கு பரிந்துரைத்துள்ளார். இருப்பினும் உள்ளூர் போலீசாரின் ஒத்துழைப்பு கிடைக்காததால் ஆள்மாறட்ட அமைச்சரை கைது செய்ய முடியாமல் தமிழக போலீசார் திணறிவருகின்றனர்.

உச்சநீதிமன்றத்தில் மனு

இந்த நிலையில் அமைச்சர் கல்யாணசுந்தரம் முன் ஜாமீன் கோரி உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை இன்று நடைபெற உள்ளது. உச்சநீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பினை அடுத்தே கல்யாண சுந்தாரம் கைதாவாரா இல்லையா என்பது தெரியவரும்.

English summary
Kalyanasundaram went into hiding after the Madras high court dismissed his anticipatory bail plea on November 8. He has approached the Supreme Court seeking anticipatory bail. TamilNadu police still struggles to nab him.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X