For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

18 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு பெங்களூரில் தொடங்கியது

By Mayura Akilan
Google Oneindia Tamil News

பெங்களூர்: இந்திய பெருங்கடல் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்றுள்ள 11 வது மாநாடு பெங்களூரில் தொடங்கியுள்ளது. இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் வர்த்தகம், முதலீடு, கடலோரப் பாதுகாப்பு குறித்து முக்கியமாக விவாதிக்கப்படவுள்ளது

இந்திய பெருங்கடல் நாடுகளின் பிராந்திய அமைப்பில் இந்தியா, ஆஸ்திரேலியா, மொரிசியஸ், கென்யா, உள்ளிட்ட 18 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த நாடுகளைச்சேர்ந்த அமைச்சர்கள் பங்கேற்கும் 11 வது மாநாடு இன்று பெங்களூரில் தொடங்கியுள்ளது.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் ஆஸ்திரேலியா, பங்களாதேஷ், கென்யா, இந்தோனேசியா,மொரிசியஸ், மற்றும் ஏமன் நாடுகளைச்சேர்ந்த வெளியுறவுத்துறை அமைச்சர்களும், ஸ்ரீலங்கா,தான்சானியா நாடுகளில் இருந்து மூத்த அமைச்சர்களும், அமைப்பில் அங்கம் வகிக்கும் பிறநாடுகளச்சேர்ந்த இணை அமைச்சர்களும் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். பதினெட்டு நாடுகளிடையே நடைபெறும் வர்த்தகம், முதலீடு, கடலோரப்ப பாதுகாப்பு குறித்து இந்த மாநாட்டில் முக்கியமாக விவாதிக்கப்படவுள்ளது..

2 ஆண்டுகளுக்கு தலைமை பொறுப்பு

இந்த மாநாட்டின்போது அடுத்த 2 ஆண்டுகளுக்கான தலைவர் பதவியை இந்தியா ஏற்கவுள்ளது. அதற்கடுத்த ஆண்டுகளில் ஆஸ்திரேலியா, இந்தோனேசியா ஆகிய நாடுகள் தலைமைப் பொறுப்புக்கு வரவுள்ளன.

English summary
The11th ministerial meeting of the Indian Ocean Rim Association for RegionalCooperation will be held on Tuesday with a renewed 'sense of interest' amongthe 18 member countries united only by their sharing of a common sea. Trade, investment and maritime security issues will be focused in the meetingchaired by India's external affairs minister S M Krishna at the India'stech-hub Bangalore.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X