For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கடலோர போலீஸ் நிலையங்களுக்கு நவீன வாகனங்கள்- ஜெ. உத்தரவு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் உள்ள 12 கடலோர காவல் நிலையங்களுக்கும் சிறப்பு வாகனங்களை அளிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு ஒரு கோடியே 56 லட்சம் ரூபாய் செலவாகும் என முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் திருவள்ளூர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி மாவட்டம் வரை 1076 கிலோமீட்டர் நீளமுள்ள கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளை பாதுகாக்கும் வண்ணம் 1994 ஆண்டு முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களால் கடலோர காவல்படை ஏற்படுத்தப்பட்டது. இந்த கடலோர காவல்படையானது, கடற்படை, உள்ளூர் காவல்துறை, மீன்வளத்துறை, சுங்கத்துறை, வருவாய்துறை அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுகிறது.

நவீன வாகனங்கள்

கடற்கரையோரம் நடைபெறும் குற்றங்களை தடுப்பது கடலோர காவல்படையின் பணியாகும். பெரும்பாலான கடற்கரைகளுக்கு செல்ல சரியான சாலை வசதியில்லை. மணலில் செல்லக்கூடிய வாகனங்களும் கடலோர காவல்படையிடம் இல்லை. எனவே இதனைக் கருத்தில் கொண்டு மணற்பாங்கான கடற்பகுதிகளைப் பாதுகாக்க, கடலோர காவல்படைக்கு அனைத்து வகையான பாதைகளிலும் துரிதமாக செல்லக்கூடிய சிறப்பு வாகனங்களை கடலோர பாதுகாப்புப் படையை சேர்ந்த 12 காவல் நிலையங்களுக்கும், தலா ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் ஒரு ஜீப் அளிக்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதனால், அரசுக்கு 1 கோடியே 56 லட்சம் ரூபாய் தொடரா செலவினமும், 48 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய், ஆண்டொன்றுக்கு தொடர் செலவினமும் ஏற்படும் என்று தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறபட்டு உள்ளது.

English summary
TN Govt has sanctioned all terrain vehicles to TN Coastal police stations. CM has issued a statement regarding this.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X