For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆலங்குளத்தில் மல்லி இலை, வாழைக்காய் விலை கடும் உயர்வு

Google Oneindia Tamil News

ஆலங்குளம்: ஆலங்குளம் வட்டாரத்தில் பெரும்பாலான காய்கறிகளின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. ஆனால் மல்லி இலை விலை மட்டும் தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகிறது.

ஆலங்குளம் வட்டாரத்தில் விலையும் காய்கறிகள் தமிழகத்தின் பல பகுதிகளுக்கும், கேரள மாநிலத்திற்கும் கொண்டு செல்லப்படுகிறது. தென்மாவட்டத்தில் பெய்த தொடர் மழை காரணமாக காய்கறிகள் விலை தொடர்ந்து ஏற்றத்தில் இருந்து வந்தது. குறிப்பாக தக்காளி, கேரட், கத்தரிக்காய், மல்லி இலை, மிளகாய் போன்றவை முன் எப்போதும் இல்லாத அளவில் வி்ற்கப்பட்டன.

கடந்த வாரம் வரை இதே நிலை தொடர்ந்தது. இந்நிலையில் இந்த வார துவக்கத்தில் இருந்தே விலை குறைய தொடங்கியது. மல்லி இலை மட்டும் கிலோ ரூ.50 முதல் ரூ.100 வரை விற்கப்பட்டு வந்த நிலையில் அதிகபட்சமாக நேற்று ரூ.120க்கு விற்பனையானது. இன்றைய நிலவரப்படி கடந்த வாரம் ரூ.25 வரை விற்கப்பட்ட வெண்டைக்காய், சீனி அவரக்காய், புடலங்காய் போன்றவை ரூ.10 முதல் ரூ.15 வரை விற்கப்படுகின்றன. மேலும் தக்காளி, கத்தரிக்காய் போன்றவை ரூ.10 முதல் ரூ.15 வரை விலை குறைந்துள்ளது.

வாழைக்காய் விலை கிலோ ரூ.6ல் இருந்து ரூ.12 வரை விற்கப்படுகி்றது. வாழைக்காய் விலை ஏற்றத்தால் பெரும்பாலான ஹோட்டல்கள் மற்றும் டீக்கடைகளில் வாழைக்காய் பஜ்ஜிக்கு குட்பை சொல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

English summary
Most of the vegetables prices have decreased compared to the last week but coriander leaves price continues to be higher in Alangulam area. A kg coriander leaves cost Rs. 120.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X