For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மத்திய அரசின் அலட்சியத்தால் தமிழக, குஜராத் மீனவர்களுக்கு கடும் பாதிப்பு-மோடி புகார்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Narendra Modi
ராஜ்கோட்: மீனவர்களின் நலனில் மத்திய அரசு அக்கறையின்றி இருப்பதாக குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டியுள்ளார். பாகிஸ்தான் சிறையில் உள்ள 4,500 மீனவர்களை மீட்க மன்மோகன்சிங் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர் புகார் கூறியுள்ளார். மேலும் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலையும் அவர் கண்டித்துள்ளார்.

குஜராத் மாநிலம் போர்பந்தர் மாவட்டத்தில் 281 கோடி ரூபாயில் பல்வேறு நலத்திட்டப்பணிகளை தொடக்கி வைத்துப் பேசியதாவது:

மாநிலத்தின் அமைதிக்காகவும், ஒற்றுமைக்காகவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டவருகின்றன. மத்தியில் ஆளும் அரசு குஜராத் மாநிலத்தை விமர்சனம் செய்வதிலேயே காலத்தை செலவிடுகிறது. பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டதால் விலை வாசி உயர்ந்து பொதுமக்களும், பெண்களும் பாதிக்கப்பட்டனர்.

மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு மக்களின் மீது குறிப்பாக மீனவர்கள் மீது எந்தவித அக்கறையும் இல்லை. 4500 மீனவர்கள் பாகிஸ்தான் சிறையில் உள்ளனர். அவர்களை விடுவிப்பது தொடர்பாக பலமுறை பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளேன். சமீபத்தில் பாகிஸ்தான் பிரதமர் ஹிலானியை சந்தித்து பேசிய மன்மோகன் சிங் மீனவர்களை விடுவிப்பது குறித்து எதுவும் பேசவில்லை

இலங்கை கடற்படையினரால் தினமும் தமிழக மீனவர்கள் தாக்கப்படுகின்றனர். அதற்கும் மத்திய அரசு இதுவரை கண்டனம் கூட தெரிவிக்கவில்லை. மீனவர்கள் பிரச்னையினால் குஜராத் மற்றும் தமிழ்நாடு மாநிலங்கள் பெரும் பாதிப்பிற்குள்ளாகிறது. இந்த பிரச்னைய‌ை தீர்க்கும் மன‌நிலையில், மத்திய அரசு இல்லை என்றும் மோடி குற்றஞ்சாட்டினார்.

English summary
Criticizing the UPA government at the Centre for not taking initative with the Pakistan government to release the 4,500 Indian fishermen languishing in Pak jails, Gujarat Chief Minister Narendra Modi today alleged that Prime Minister Manmohan Singh did not discuss the issue with his Pakistan counterpart Yousuf Raza Gialani when they met recently.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X