For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் பாதுகாப்பாக இல்லை- முன்னாள் அமைச்சர் எச்சரிக்கை

By Chakra
Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் பாதுகாப்பாக இல்லை என்று அந் நாட்டின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் தீவிரவாதிகள் வசம் சிக்க நிறைய வாய்ப்புக்கள் இருப்பதாக இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும் கவலை தெரிவித்து வருகின்றன. அந் நாட்டின் உளவுப் பிரிவான ஐஎஸ்ஐக்கும் தீவிரவாத அமைப்புகளுக்கும் இடையிலான நெருக்கம் காரணமாக இந்த அச்சம் பல உலக நாடுகள் மத்தியிலும் உள்ளது.

இந் நிலையில் அந் நாட்டின் முன்னாள் வெளியுறவு அமைச்சரே இவ்வாறு கூறியிருப்பது இந்த அச்சத்தை மேலும் அதிகரிப்பதாக உள்ளது.

இப்போதைய அதிபர் ஆசிப் அலி சர்தாரி தலைமையிலான அரசின் முழுக் கட்டுப்பாட்டில் நாட்டின் பாதுகாப்பு இல்லை என்று கூறியுள்ள அவர், நாட்டின் அணு ஆயுதங்களும், அணு ஆயுத ஆராய்ச்சி மையங்களும் பாதுகாப்பாக இல்லை என்று கூறியுள்ளார்.

English summary
Pakistan's nuclear weapons are not safe under the present PPP dispensation, country's former foreign minister Shah Mehmood Qureshi has said, evoking an angry response from the government, which rejected his contention as "baseless". Qureshi said, Pakistan's nuclear programme was not safe under President Asif Ali Zardari's leadership.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X