For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கனிமொழி தான் உண்டு, தன் வேலையுண்டு என்றிருந்தார்: திகார் அதிகாரிகள் நற்சான்று

By Siva
Google Oneindia Tamil News

Kanimozhi
டெல்லி: சிறையில் இருந்த வரைக்கும் திமுக எம்பி கனிமொழி தான் உண்டு, தன் வேலையுண்டு என்று சமத்தாக இருந்தார் என்று திகார் சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2ஜி ஊழல் வழக்கி்ல் கைதான திமுக எம்பி கனிமொழி கடந்த மே மாதம் 20ம் தேதி முதல் நேற்று மாலை வரை திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவருக்கு டெல்லி உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை அடுத்து நேற்றிரவு 7.30 மணிக்கு திகாரில் இருந்து வெளியே வந்தார்.

இந்நிலையில் சிறையில் இருந்து வரைக்கும் கனிமொழி சிறை சட்ட, திட்டங்களுக்கு உட்பட்டு நல்லவிதமாக நடந்து கொண்டதாக சிறை அதிகாரிகள் நற்சான்றிதழ் கொடுத்துள்ளனர்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது,

அவர் சிறையில் இருந்தபோது பெரும்பாலான நேரத்தை புத்தகங்கள் வாசிப்பதில் செலவிட்டார். அவரை சிறை நூலகத்தில் அடிக்கடி காணலாம். விஐபி அந்தஸ்தில் இருந்தாலும் அவர் மிகவும் எளிமையாக இருந்தார். எங்களுக்கு எந்த தொந்தரவும் கொடுத்ததில்லை.

தந்தை,மகனைப் பார்த்து கதறி அழுதார்

கடந்த மாதம் அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்ட போதும், சிறையில் அவரது தந்தையும், திமுக தலைவருமான கருணாநிதியைப் பார்த்தபோதும், தனது மகனைப் பார்த்தபோதும் அவரால் அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் கதறி அழுதார்.

அவர் சிறைக்குள் தியானம் செய்வார். சிறைக்கு வந்த புதிதில் சிறை வளாகத்தில் நடக்கும் மெழுகுவர்த்தி தயாரித்தல் இடத்திற்கு சென்று மெழுகுவர்த்தி செய்வது எப்படி என்று கற்றுக் கொண்டார். மேலும் பானை செய்தல், டெய்லரிங் வேலை உள்ளிட்ட பணிகள் நடக்கும் இடங்களுக்கும் சென்றார். மற்றபடி டிவி பார்ப்பார்.

பிற கைதிகளைப் போன்று அவர் அது வேண்டும், இது வேண்டும் என்று கேட்டதில்லை என்றனர்.

கனிமொழி அடைக்கப்பட்டிருந்த சிறை எண் 6ல் மெழுகுவர்த்தி தயாரிக்கும் இடம் உள்ளது. அங்கு தயாரிக்கப்படும் மெழுகுவர்த்திகள் திகார் சிறை தயாரிப்பு என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது.

English summary
Tihar jail authorities have given a good conduct certificate about DMK MP Kanimozhi who was kept there from 20-5-2011 till 29-11-11. Kani used to stick with the rules and never demanded anything like other inmates. She used to read a lot and could be often seen in jail library, they told.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X