For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'ரோபோ மாதிரி நடப்பாரே, அவர்தானே பி.எம்'..தேனியில் விஜயகாந்த் நக்கல் பேச்சு

By Siva
Google Oneindia Tamil News

Vijayakanth
தேனி: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசின் போக்கைக் கண்டித்து தேனியில் விஜயகாந்த் தலைமையில் தேமுதிக ஆர்ப்பாட்டம் நடநத்து. அப்போது முல்லைப் பெரியாறு பிரச்சினையை மட்டும் பேசாமல் அதிமுக அரசின் விலை ஏற்றப் பிரச்சனை, கருணாநிதி குடும்பப் பிரச்சினை உள்ளிட்டவற்றையும் பிரதானமாக பேசினார் விஜயகாந்த்.

விஜயகாந்த்தின் பேச்சின்போது கூடியிரு்நத கூட்டத்தாரையும் அவ்வப்போது கண்டித்தபடி,முறைத்தபடி, உதட்டைக் கடித்தபடி வழக்கம் போல பேசினார் விஜயகாந்த்.

விஜயகாந்த் முல்லைப் பெரியாறு குறித்து விலாவாரியாகப் பேசப் போவதை கேட்க ஆவலுடன் காத்திருந்தவர்கள் அவர் எப்படியெப்படியோ பேசுவதைப் பார்த்து, தங்களுக்குள் பேசியபடியும், திடீர் திடீரென கேப்டன் வாழ்க என்று கோஷமிட்டபடியும் இருந்தனர். இதைப் பார்த்து டென்ஷனான விஜயகாந்த், ஏம்ம்பா, நை நைன்னு பேசிட்டிருக்கீங்க, நான் பேசவா, வேண்டாமா என்று கண்டித்தார் விஜயகாந்த்.

திடீரென கூட்டத்தை நோக்கி கை காட்டி, அது யாரு நம்ம கட்சித் துண்டோடு இருப்பது,அது வேறகட்சி ஆளா என்று கோபமாக கேட்டார். திடீரென ஒரு கட்டத்தில் தனது தலையில் அடித்துக் கொண்டு பேசினார்.

விஜயகாந்த் பேச்சில் வழக்கம் போல பல இடங்களில் 'லிங்க்' இல்லை.முல்லைப் பெரியாறு அணை குறித்துப் பேசிக் கொண்டிரு்நத அவர் திடீரென கருணாநிதி மஞ்சள் துண்டு, பெரியார் சிவப்புத் துண்டு என்று பேசினார்.

வழக்கமாக விஜயகாந்த் பேச்சை இதுவரை சன் டிவி ஒருபோதும் நேரடியாக ஒளிபரப்பியதில்லை.ஆனால் என்றும் இல்லாத புதுமையாக இன்று நேரடியாக ஒளிபரப்பியது. இருப்பினும் கருணாநிதி குறித்தும், ஸ்டாலின் குறித்தும் விஜயகாந்த் பேசியபோது அதிரடியாக சவுண்டைக் கட் செய்து விட்டது சன்.

விஜயகாந்த் பேசியதிலேயே பெரிய ஹைலைட் என்னவென்றால் பிரதமரை கிண்டலடித்ததுதான். ரோபோ மாதிரி நடப்பாரே அவர்தானே பி.எம் என்று கேட்டதுதான்!

English summary
DMDK leader Vijayakanth led an agitation against kerala govt in Mullaiperiyar issue today. His speech was live telecasted by Sun News channel.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X