For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மதிமுக கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் நீதிமன்றத்தில் சரண்

Google Oneindia Tamil News

சங்கரன்கோவில்: திருவேங்கடத்தில் நடைபெற்ற மதிமுக பொதுக் கூட்டத்தில் அவதூறாக பேசிய வழக்கில் மதிமுக கொள்ளை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமீன் பெற்று கொண்டார்.

சங்கரன்கோவில் தாலுக்கா திருவேங்கடத்தில் மதிமுக சார்பில் கடந்த 21.5.2010 அன்று பொதுக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மதிமுக கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் முல்லைப் பெரியாறு பிரச்சனை குறித்து பேசினார்.

அவரது பேச்சில் அப்போதைய முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாக முன்னாள் திருவேங்கடம் நகர பஞ்சாயத்து தலைவர் செந்தாமரை கண்ணன் போலீடாரிடம் புகார் செய்தார். அதன் பேரில் நாஞ்சில் சம்பத் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நாஞ்சில் சம்பத் மனு செய்து இருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி, சங்கரன்கோவில் நீதிமன்றத்தில் சரண் அடைந்து ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம் என்று உத்தரவிட்டார்.

இதனையடுத்து சங்கரன்கோவில் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பாலமுருகன் முன்னிலையில் நேற்று நாஞ்சில்சம்பத் சரண் அடைந்தார். பின்பு அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

English summary
MDMK leader Nanjil Sampath has appeared in the Madurai branch high court for getting bail. A case was filed against Nanjil Sampath for speaking of scandal about former CM Karunanidhi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X