For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குமுளியை நோக்கி நடைபயணம் சென்ற திருமாவளவன் கைது

Google Oneindia Tamil News

தேனி: விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தலைமையில் அக்கட்சியினர் சார்பில் இன்று குமுளியை நோக்கி நடைபயணம் மேற்கொண்டனர். இதையடுத்து அவர்களைப் போலீஸார் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.

முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தமிழக அரசுக்கு ஆதரவு தெரிவித்தும், தமிழகத்தின் உரிமையை வலியுறுத்தியும், கேரளாவைக் கண்டித்தும், பல்வேறு வகையான போராட்டங்கள் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன.

இந்த நிலையில் இன்று திருமாவளவன் குமுளியை நோக்கி நடைபயணம் மேற்கொண்டார். காலை 10 மணிக்கு தேனியிலிருந்து நடைபயணம் தொடங்கினர். பெரும் திரளான தொண்டர்களுடன், எழுசத்சி முழகத்துடன் திருமாவளவன் நடந்தார்.

4 கிலோமீட்டர் தொலைவுக்கு நடந்து சென்ற நிலையில், போலீஸார் அனைவரையும் தடுத்து நிறுத்தி குமுளி செல்லக் கூடாது என்று கூறி கைது செய்தனர். பின்னர் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

English summary
VCK leader Tirumavalavan and his party cadres were arrested near Theni. He led a procession towards Kumuli against Kerala govt in Mullaiperiyar issue today
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X