For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒரு ஏரி.. சில மனிதர்கள்.. காத்திருக்கும் பறவைகள்!

By Chakra
Google Oneindia Tamil News

Puttenahalli Lake
பெங்களூர்: பெங்களூரின் பழமையான புட்டனஹள்ளி ஏரியைக் காக்க பொது மக்களே இணைந்து ஒரு அறக்கட்டளையை உருவாக்கி போராடி வருகின்றனர்.

பெங்களூர் ஜே.பி. நகரில் 13 ஏக்கர் பரப்பில் பரந்து விரிந்துள்ளது இந்த புட்டனஹள்ளி ஏரி. இதை பாதுகாக்க புட்டனஹள்ளி ஏரி பாதுகாப்பு அறக்கட்டளை (பிஎன்எல்ஐடி) அமைக்கப்பட்டது. எழுத்தாளர் உஷா ராஜகோபாலன், ஆர்த்தி மனே, பிரசன்னா வைனதியா, பொறியாளர் ஓ.பி.ராமசாமி ஆகியோர் இணைந்து இந்த அறக்கட்டளையை அமைத்தனர்.

2011ம் ஆண்டு இந்த ஏரியை பராமரிக்கும் பொறுப்பை பெங்களூர் மாநகராட்சியே இந்த அமைப்பிடம் ஒப்படைத்தது. அன்று முதல் பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து இந்த ஏரியைக் காக்க இந்த அமைப்பு தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.

இந்த அறக்கட்டளை ஒரு தன்னார்வ, லாப நோக்கில்லாத அமைப்பாகும். இதில் இடம் பெற்றுள்ளோர் அனைவருமே பொது நல ஆர்வம் கொண்ட பொது மக்கள் தான். ஏரியைச் சுற்றி பல்வேறு குடும்பங்கள் தாங்களாகவே பல வகையான மரங்களை நட்டு, பராமரித்தும் வருகின்றனர். இந்த மரங்களையும் எரியையும் தேடி ஏராளமான பறவைகளும் வர ஆரம்பித்துவிட்டன.

இந்த ஏரியின் அருமையையும் முக்கியத்துவத்தையும் மக்களிடையே எடுத்துச் சொல்ல பல்வேறு நிகழ்ச்சிகளையும் இந்த அறக்கட்டளை நடத்துகிறது. குறிப்பாக குழந்தைகள் தினத்தன்று நேச்சர் வாக் என்ற நிகழ்ச்சியை நடத்தியது. ஏரியின் அவசியம் குறித்து இளம் பருவத்தினருக்கு எடுத்துச் சொல்ல அந்த நிகழ்ச்சி உதவியது.

ஏரி, அதை சார்ந்த விலங்குகள், பறவைகள், மீன்கள், தாவரங்கள் என இயற்கை நமக்குத் தந்துள்ள அழகிய சூழல் அழிந்துவிடாமல் காக்க, மனிதர்களுக்கும் இயற்கைக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்க என்னென்ன செய்ய முடியுமோ அந்த முயற்சிகளில் எல்லாம் இந்த அறக்கட்டளை ஈடுபட்டுள்ளது.

இந்தப் பணிகளுக்குத் தேவைப்படும் நிதியை நன்கொடைகள் மூலமாகவே இந்த அறக்கட்டளை பெற்று வருகிறது. ஆனால், இதை ஒரு பறவைகள் சரணாயலம் போல மாற்றிட இந்த அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது. அதற்கு இந்த நன்கொடைகள் போதுமானதாக இல்லை.

இந் நிலையில் இது போன்ற மக்கள் முயற்சிகளை ஆதரித்து நிதியுதவி செய்ய மகிந்திரா நிறுவனம் முன் வந்துள்ளது. சிறந்த திட்டத்தைத் தேர்ந்தெடுத்து மகிந்திரா நிறுவனம் உதவி செய்யவுள்ளது.

இந்தப் போட்டியில் புட்டனஹள்ளி ஏரி பாதுகாப்பு அறக்கட்டளையும் பங்கெடுத்துள்ளது. "PNLIT - Nurturing Puttenahalli Lake back to its pristine glory" என்ற திட்டத்தை மகிந்திரா நிறுவனத்திடம் சமர்பித்துள்ளது இந்த அமைப்பு.

மாதந்தோறும் 5 பிரிவுகளில் திட்டங்களை வரவேற்கும் மகிந்திரா நிறுவனம் அதை பொது மக்களின் ஓட்டெடுப்புக்கு விடுகிறது. இதில் மக்கள் எந்த திட்டங்களுக்கு அதிக வாக்களிக்கிறார்களோ, அந்தத் திட்டங்களுக்கு மாதம் ரூ. 4 லட்சத்தை மகிந்திரா உதவியாக வழங்கும்.

இதில் அதிக வாக்குகள் பெறும் திட்டங்களில் 2 திட்டங்கள் நேரடியாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுவிடும். மேலும் 3 திட்டங்களை நடுவர்கள் தேர்வு செய்வர்.

கடைசியில் நடக்கும் இறுதிப் போட்டியில் மொத்தம் 18 திட்டங்கள் போட்டியிடும். இதில் வெல்லும் திட்டத்துக்கு ரூ. 40 லட்சமும் அடுத்தடுத்த இடங்களைப் பெறும் 3 திட்டங்களுக்கு தலா ரூ. 20 லட்சமும் நிதியுதவியாக வழங்கப்படும்.

மகிந்திரா நிறுவனத்தின் இந்த உதவி புட்டனஹள்ளி ஏரிக்குக் கிடைத்தால், அதை மேலும் வளப்படுத்துவதும், பெங்களூர் போன்ற கட்டிட நெரிசல்களுக்கு மத்தியில் ஒரு இயற்கையான சரணாயலத்தையும் ஏற்படுத்துவது சாத்தியமாகும்.

பறவைகளுக்கு மட்டுமா சரணாலயம் தேவை.. நகர்ப்புற 'கான்ங்கிரீட் காடுகளில்' வசிக்கும் மனிதர்களுக்கும் தானே?.

இந்தப் போட்டியில் புட்டனஹள்ளி ஏரி வெற்றி பெற நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒரு ஒட்டு போடுவது தான். உங்களது ஒவ்வொரு ஓட்டும் மிக மிக அவசியம். இதில் ஓட்டு போட நீங்கள் செய்ய வேண்டியது இது தான்:

1. Go to www.sparktherise.com
2. Click on popular entries
3. Look for PNLIT. Click on it. Click on 'Vote'.
4. It will ask you to Signup or Login.
5. Click Login to go through Facebook or click Signup to go through email.
6. To Signup, put your name, email and password that you want to signup with. A confirmation mail will go to your email account. You need to click on the link in the email to activate your registration.
7. After activation, you do the same thing to vote.

மிக பரபரப்பான வேலைகளுக்கு மத்தியில் இதற்கு ஏது நேரம் என்று ஒதுங்கிவிடாதீர்கள்.. தயவு செய்து வாக்களியுங்கள்.. உங்கள் நட்பு வட்டாரத்தையும் குடும்பத்தினரையும் வாக்களிக்கச் செய்யுங்கள்.

பறவைகள் காத்திருக்கின்றன!...

இந்த ஏரி குறித்த மேலும் விவரங்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்..

English summary
One doesn't always get an opportunity to do something extraordinary. When you do, you've got to grab it! This is what the Puttenahalli Neighbourhood Lake Improvement Trust is doing. Now, they need your support!
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X