For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அணை நோக்கி பேரணி: மதுரை ஆதீனத்தை திருப்பி அனுப்பிய போலீஸ்

By Siva
Google Oneindia Tamil News

Madurai Adheenam
கம்பம்: முல்லைப் பெரியாறு அணையை பாதுகாக்க வலியுறுத்தி மதுரையில் இருந்து பேரணி வந்த மதுரை ஆதீனத்தை தேனியில் இருந்து போலீசார் திருப்பி அனுப்பினர்.

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையில் கேரள அரசின் போக்கை கண்டித்து வணிகர்களும், சமூக ஆர்வலர்களும் போராடி வருகின்றனர். இதனிடையே அணையை பாதுகாக்க வலியுறுத்தி மதுரை ஆதீனம் மதுரையில் இருந்து தேனி நோக்கி கார்களில் வாகனப் பேரணி நடத்தினார்.

இன்று முற்பகல் தேனி வந்தடைந்த அவரை, போலீஸார் தடுத்து நிறுத்தினர். அவருடன் பேச்சு வார்த்தை நடத்திய போலீசார் பின்னர் அவரை மீண்டும் மதுரைக்கு திருப்பி அனுப்பினர்.

சில தினங்களுக்கு முன்பு கூட்டம் ஒன்றில் பேசிய ஆதீனம், முல்லைப் பெரியாறு அணை பகுதி மதுரை மீனாட்சியம்மனுக்கு சொந்தமானது. எனவே, கேரள அரசு வறட்டு பிடிவாதம் பிடிக்காமல் தமிழகத்திடம் அப்பகுதியை ஒப்படைக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Madurai Adheenam has started vehicle rally from temple city towards Theni over Mullai Periyar issue. More than 15 cars have started from Madurai in the morning under the leadership of Adheenam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X