For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அரிசி கடத்தல் கும்பலுடன் தொடர்பு - இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.க்கள் சஸ்பெண்ட் - ஐ.ஜி. அதிரடி

Google Oneindia Tamil News

ஈரோடு: ரேஷன் அரிசி கடத்தலுக்கு உதவிய உணவு கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.க்களை சஸ்பெண்ட் செய்து ஐ.ஜி அதிரடியாக உத்தரவிட்டார்.

ஈரோடு உணவுக் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் காந்தி. இவர் கடந்த ஆகஸ்ட் 6ம் தேதி ஈரோட்டில் பணியில் சேர்ந்தார். இந்த பிரிவில் 9 போலீசார் பணிபுரிந்து வருகின்றனர்.

அரிசி கடத்தல் கும்பலுடன் ஈரோடு உணவு கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் காந்தி மற்றும் எஸ்.ஐ.க்கள் சிவபாலன், வைரபெருமாள் உள்ளிட்டோர் தொடர்பு வைத்து இருந்தனர். அதன் மூலம் மாதந்தோறும் மாமூல் பெற்று கொண்டு, அரிசி கடத்தலுக்கு அவர்கள் உதவி வந்து உள்ளனர்.

இது குறித்த ரகசிய தகவல் ஆதாரத்துடன் ஐ.ஜி.கரன் சின்கா வசம் கிடைத்தது. இதனை அடுத்து ஈரோடு உணவு கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் காந்தி மற்றும் எஸ்.ஐ.க்கள் சிவபாலன், வைரபெருமாள் உள்ளிட்டரை சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

English summary
West Zone IG Karan Sinha suspended Erode Food cell Inspector Gandhi and SIs Sivabalan and Variraperumal for having links with rice smugglers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X