சுகுமாறன் நம்பியார் உடல் தகனம்: நிதின் கட்காரி நேரில் அஞ்சலி
சென்னை: மறைந்த பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் சுகுமாறன் நம்பியாரின் உடல் தகனம் திங்கட்கிழமை நடைபெற்றது. பாரதீய ஜனதா கட்சித் தலைவர் நிதின் கட்காரி அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
மறைந்த பிரபல நடிகர் எம்.என்.நம்பியாரின் மகனும், பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினருமான எம்.என்.சுகுமாறன் நம்பியார் ஞாயிறுக்கிழமையன்று மாரடைப்பால் காலமானார்.
பாரதீய ஜனதா கட்சியின் தேசிய, மாநில நிர்வாகிகள் உட்பட பலரும் அவரது வீட்டுக்கு திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர்.
திங்கட்கிழமை காலை பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் நிதின் கட்காரி டெல்லியிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். காலை 10.15 மணி அளவில் கோபாலபுரத்தில் உள்ள சுகுமாறன் நம்பியாரின் வீட்டுக்கு வந்த அவர், சுகுமாறன் நம்பியார் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
ஈடு செய்ய முடியாது
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிதின் கட்கரி, சுகுமாறன் நம்பியார் கட்சிக்காக தீவிரமாக பாடுபட்டவர். தன்னை முழுமையாக கட்சியில் இணைத்துக் கொண்டு செயல்பட்டவர். அவரது மறைவு தமிழக பாரதீய ஜனதா கட்சிக்கு மட்டுமின்றி அகில இந்திய பாரதீய ஜனதா கட்சிக்கும் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
அவருடன் தேசிய செயலாளர் சதீஷ், தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன், தமிழக பாரதீய ஜனதா கட்சித் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், தேசிய அலுவலக தொடர்பாளர் சண்முகநாதன், இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம.கோபாலன், முன்னாள் மத்திய அமைச்சர் சு.திருநாவுக்கரசர் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர்.
உடல் தகனம்
இதன் பின்னர் சுகுமாறன் நம்பியாரின் உடல் வேனில் வைக்கப்பட்டு இறுதி ஊர்வலம் புறப்பட்டது. பெசன்ட் நகர் மின் மயானத்தை அடைந்ததும் அவரது மகன் சித்தார்த் இறுதி சடங்குகளை செய்தார். பின்னர் அவரது உடல் மின் தகன மேடையில் தகனம் செய்யப்பட்டது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications