For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தொடர் கொலைகள்-வரலாறு காணாத வன்முறைகள்-அச்சத்தில் தூத்துக்குடி மக்கள்

Google Oneindia Tamil News

தூத்துக்குடி: தூத்துக்குடி நகரில் கடந்த பத்து நாட்களாக கொலையும், வன்முறையும் தலைவிரித்தாடுவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். அடுத்து என்ன நடக்குமோ என்ற பயத்தில் வீடுகளை விட்டு வெளியே வரவே யோசிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

புத்தாண்டு முதல் நாள் டிசம்பர் 31 ம் தேதி தூத்துக்குடியில் சைக்கிளில் லிப்ட் கொடுக்காத முதியவர் வெட்டி கொல்லப்பட்டார். இதனையடுத்து ஜனவரி 2ம் தேதி இரவு டாக்டர் சேதுலட்சுமி, சென்டரிங் தொழிலாளி என இருவர் கொல்லப்பட்டனர். டாக்டர் கொலையை கண்டித்து அரசு, தனியார் மருத்துவமனை டாக்டர்கள் வேலை நிறுத்தம், பேரணி, ஆர்ப்பாட்டம் என தொடர் போராட்டங்களை நடத்தினர்.

வக்கீல்கள் போராட்டம்

6ம் தேதி வக்கீல்கள், மார்க்சிஸ்ட் கட்சியினர் மோதல் ஏற்பட்டதால் போராட்டங்கள் நடந்தன. செவ்வாய்க்கிழமை நடந்த பசுபதி பாண்டியன் கொலை எதிரொலியாக நடந்த கலவரம் என தூத்துக்குடி மாநகரம் அமைதியை இழந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அடுத்து என்ன நடக்குமோ என அச்சத்தில் உள்ளனர்.

English summary
Tuticorin people are gripped with fear after violence and murders. 3 murders including a woman doctor and continious violence forced the people to dip in fear.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X