For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டெல்லியை முற்றாக மூடிய பனி... 350 விமானங்கள் தாமதம்!!

By Shankar
Google Oneindia Tamil News

Flight
டெல்லி: தலைநகர் டெல்லியில் என்றுமில்லாத அளவுக்கு பனிமூட்டம் அதிகமானதால் 350 விமானங்கள் குறைந்தது 2 மணி முதல் 8 மணி நேரம் வரை தாமதமாக தரையிறங்கின.

இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். டெல்லி முழுவதுமே இன்று அதிகாலை பனி மூட்டம் அசாதாரணமாக இருந்தது. எதிரில் உள்ள பொருள், மரம், கட்டடம், மனிதர்கள் என எதுவுமே தெரியாததால் தரைவழிப் போக்குவரத்து அடியோடு முடங்கிப் போனது.

இந்தியா காந்தி விமான நிலையத்தில் தரையிறங்கு, ஓடுதளமே தெரியவில்லை விமானிகளுக்கு. பூஜ்யம் அளவுக்கு பார்வை தூரம் இருந்ததால், விமானங்கள் மேலேயே சுற்றிக் கொண்டிருந்தன... அல்லது அருகில் உள்ள நகரங்களை நோக்கிப் பறந்தன.

"இந்த சீஸனிலேயே மிக மோசமான நாள் இதுவாகத்தான் இருக்கும். பிற்பகல் 12.45-க்குப் பிறகுதான் வானம் ஓரளவுதான் தெளிவாகும் நிலை.

இதனால் 28 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுவிட்டன. 320 விமானங்கள் தாமதமாகியுள்ளன. அதிகபட்சம் 8 மணிநேரம் கூட தாமதமாகியுள்ளன. பயணிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்," என்றார் இந்திரா காந்தி விமான நிலைய அதிகாரி ஒருவர்.

இன்று அதிகாலை டெல்லியில் நிலவிய தட்பவெப்பம் 6 டிகிரி என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லியில் இந்த சீஸனில் அதிகபட்ச வெப்பமே 14 டிகிரிதான் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
If you were flying in or out of Delhi on Friday, you couldn't have chosen a worse day. Near-zero visibility, an hour-long closure of air space for Republic Day practice and three VIP movements led to the season's worst disruptions at Indira Gandhi International airport.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X