For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திவாலானது ‘கோடக்’ கேமரா: அமெரிக்க அரசிடம் நோட்டீஸ் அளித்தது!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Eastman Kodak Inches Toward
நியூயார்க்: அமெரிக்காவில் உள்ள புகழ் பெற்ற "கோடக்' கேமாரா நிறுவனம், தொடர்ந்து நஷ்டத்தைச் சந்தித்து வருவதால், திவால் நோட்டீஸ் அளித்துள்ளது.

புகைப்படக் கருவி, படச் சுருள் ஆகியவற்றில் உலகப் புகழ் பெற்றது அமெரிக்காவின் "கோடக்' நிறுவனம். சந்திரனில் நீல் ஆர்ம்ஸ்டாங் கால்பதித்த காட்சியை வெளியிட, இந்த நிறுவன படச் சுருள் உதவி வரலாற்றில் இடம் பெற்றது. 131 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த நிறுவனம், மோசமான நிர்வாகம், போட்டியாளர்களைச் சமாளிக்க முடியாமை ஆகிய காரணங்களால், 2003 முதல் சிறிது சிறிதாக நலிவடைந்தது. இதனையடுத்து கடந்த 2003 முதல், இதுவரை, தனது 13 படச் சுருள் மற்றும் புகைப்படக் கருவி தயாரிப்பு நிலையங்களை மூடிய இந்நிறுவனம், 47 ஆயிரம் ஊழியர்களையும் வீட்டுக்கு அனுப்பியது.

திவால் நோட்டீஸ்

இந்தநிலையில் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டு வருவதாக கூறி அமெரிக்க அரசிடம், கோடாக் நிறுவனம் திவால் நோட்டீஸ் (சாப்டர் 11) அளித்துள்ளது. இதன் மூலம் நிறுவனங்கள், தனிநபர்களிடம் வாங்கிய கடனை, இந்நிறுவனம் சிறிது கால அவகாசம் எடுத்துக் கொண்டு மெல்ல மெல்ல செலுத்தும்.

இந்தியாவில் சிக்கல் இல்லை

இந்த திவால் நோட்டீஸ், அமெரிக்காவில் இயங்கும் வர்த்தகத்திற்கு மட்டுமே என, கோடக் ஆசியா பிரிவின், சந்தைப்படுத்தல் துணைத் தலைவர் பி.என்.ரகுவீர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கோடக் நிறுவனத்தின் வர்த்தகம் நல்ல முறையில் இயங்கி வருவதால், வாடிக்கையாளர்களும், சில்லரை வியாபாரிகளும் இந்நிறுவனத்துடனான வர்த்தகத்தை, இப்போது உள்ளபடியே தொடரலாம் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.

English summary
As Eastman Kodak Co. (EK) investors bet the 131-year-old photographic pioneer was headed for bankruptcy, the company decided Chapter 11 was the simplest way to become the leaner digital printing specialist it aspires to be.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X