For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புயல்நிவாரணம் கோரி நாகை மீனவர்கள் வேலை நிறுத்தம்

By Shankar
Google Oneindia Tamil News

Fishermen Strike
நாகப்பட்டினம்: தானே புயலால் பாதிக்கபட்ட தங்களுக்கு புயல் நிவாரணம் வழங்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து நாகப்பட்டினம் மாவட்டம் கொள்ளிடம் கிராம மீனவர்கள் வெள்ள்ளியன்று கடலுக்குச் செல்லவில்லை.

வீடு மற்றும் படகுகளில் கறுப்புக்கொடி ஏற்றி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். புயல் நிவாரணம் கேட்டு கொள்ளிடம் கிராம மக்கள் கடந்த சில நாட்களுக்கு முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனாலும் நிவாரணம் வழங்கவில்லை. இதையடுத்து தற்போது வேலை நிறுத்தத்தில் குதித்தனர். 3 ஆயிரம் மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொள்ளிடம் அடுத்த பழையாறு மீன்பிடி துறைமுகத்திலிருந்து 243 விசைப்படகுகள், 400 பைபர் படகுகள், 300 நாட்டுப்படகுகளிலிருந்து 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருகின்றனர்.

புயல் நிவாரணம் வழங்கப்படும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்றும் மீனவர்கள் அறிவித்துள்ளனர்.

English summary
To condemn the lack of Thane cyclone relief aids, more than 3000 Nagapattinam fishermen announced strike Today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X