For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இளம் விளையாட்டு வீரர்களுக்கு ரூ. 6 ஆயிரம் ஊக்கத்தொகை; உலகத்தரமிக்க அரங்கம்! - ஜெ. அறிவிப்பு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாட்டில் விளையாட்டுத்துறையை மேம்படுத்தவும், நவீன விளையாட்டு அரங்கங்கள் அமைக்கவும் பல கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா ஒப்புதல் அளித்துள்ளார். மேலும் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க அவர்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாட்டில் கூடைப்பந்து மற்றும் கையுந்து பந்து விளையாட்டினை ஊக்குவிக்கும் வகையில், திருச்சி, திருவண்ணாமலை மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் கால்வாலியம் செயற்கை தகடுகளான மேற்கூரை வசதியுடன் கூடிய கூடைப்பந்து மற்றும் கையுந்து பந்து விளையாட்டு மைதானங்கள், 1 கோடியே 50 லட்சம் ரூபாயில், அதாவது ஒவ்வொரு இடத்திலும் 50 லட்சம் ரூபாய் மதிப்பிட்டில் அமைக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

மேலும், மதுரையில் பன்னாட்டு தரம் வாய்ந்த செயற்கை இழை ஹாக்கி மைதானம், நீர்தெளிப்பான், மூடிய வடிகால் வசதி மற்றும் மின்னொளி வசதியுடன் 6 கோடி ரூபாய் செலவில் அமைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

திருச்சி மாநகரில் தடகளப் போட்டியினை ஊக்குவிக்க, 8 ஓடுகளப் பாதைகளுடன் கூடிய செயற்கை இழையிலான தடகள ஒடுபாதை, மூடிய வடிகால் வசதி மற்றும் மின்னொளி வசதியுடன் 6 கோடி ரூபாயில் செலவில் உருவாக்க ஜெயலலிதா உத்தர விட்டுள்ளார்.

முதல்வர் கோப்பைக்காக, மாநில அளவிலான குழு விளையாட்டுப் போட்டிகள் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு கூடை பந்து, கால்பந்து, ஹாக்கி , கபாடி மற்றும் கையுந்துபந்து ஆகிய விளையாட்டுகள் 4 கோடியே 2 லட்சம் ரூபாய் செலவில் நடத்துவதற்கு ஜெயலலிதா ஒப்புதல் அளித்துள்ளார்.

இளம் வீரர்களுக்கு ஊக்கத்தொகை

உலகத் திறனாளர்களை கண்டறியும் திட்டத்தின் கீழ் 3,240 இளம் விளையாட்டு வீரர்கள் கண்டறியப்பட்டு, அவர்களை சர்வதேச போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெரும் வகையில் ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும் ரூ.6,000 ஊக்கத் தொகை வழங்க உத்தரவிட்டுள்ளார். இத் திட்டத்திற்கு 1 கோடியே 94 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் செலவினம் ஏற்படும்.

தமிழகத்தில் பல்வேறு விளையாட்டுக்களை மேம்படுத்தி, பல்வேறு இளம் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை உருவாக்கும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய தலைமை அலுவலகம் மற்றும் மண்டல அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலர்களின் பணிக்காக முதற்கட்டமாக 8 வாகனங்களை 48 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வாங்கு வதற்கு ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

உலகத்தரம் வாய்ந்த செயற்கை தளங்கள் அமைக்க மற்றும் விளையாட்டு உபக ரணங்கள் வாங்கிட 1 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். மேலும் 30 கோடி ரூபாய் செலவில் பார்வையா ளர்களுக்கான இருக்கை வசதி, மரத்தாலான தரைத்தளம் மற்றும் மின் வசதி ஆகியவற்றை உள்ளடக்கிய உள் விளையாட்டு அரங்கங்களை 20 மாவட்டங்களில் அமைப்பதற்கு ஒப்புதல் அளித்துள் ளார்கள்.

விளையாட்டு விடுதிகள்

தமிழ்நாட்டில் ஒவ் வொரு மாவட்டத்திலும் ஒரு விளையாட்டு விடுதி வீதம், 23 மாவட்டங்களில் விளையாட்டு விடுதிகளை அமைக்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆணையிட் டுள்ளார். இதன்படி, ஒவ்வொரு விளையாட்டு விடுதியிலும் 60 மாணவ, மாணவியருக்கு உயர்தர பயிற்சி அளிக்கப் படும்.இவர்களுக்கு உணவு, உறைவிடம் மற்றும் இதர வசதிகள் அனைத் தும் வழங்கப்படும்.

English summary
Tamil Nadu Chief Minister J. Jayalalitha today announced on enhancement of expenditure on sports schemes in the state.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X