For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கூடங்குளம் அணு உலை பற்றி ஆராய மாநில அரசின் வல்லுநர் குழு: முதல்வர் ஜெயலலிதா

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: கூடங்குளம் அணு உலை பற்றி ஆராய மாநில அரசு வல்லுநர் குழுவை அமைக்கும் என்று தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா பேசுகையில், தமிழக அரசு அமைக்கும் வல்லுநர் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

மேலும் தானே புயலால் பாதிக்கப்பட்டோருக்காக ரூ700 கோடி நிதி ஒதுக்கப்படுவதாகவும் முந்திரி, பலா ஆகியவற்றின் பரமாரிப்புக்கான செலவை 5 ஆண்டுகளுக்கு அரசே ஏற்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேபோல் வரும் ஜூன் மாதத்தில் மின் உற்பத்தி திறன் 1950 ஆக இருக்கும் என்றும் 2013ஆம் ஆண்டு மத்தியில் முற்றிலுமாக மின்வெட்டு இல்லாத நிலை ஏற்படும் என்றும் ஜெயலலிதா உறுதியளித்துள்ளார்.

English summary
Stepping up outreach on kudankulam plant issue, Chief Minister J Jayalalithaa announced Tamil Nadu Govt. to set up separate expert panel. The Kudankulam project, where two 1000MW nuclear plants built with Russian collaboration are in advanced stages of completion, ran into a rash of protests as it approached final stages of commissioning.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X