For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆண்ட்ரிக்ஸ் விவகாரத்தில் மாதவன் நாயர் சொல்வதெல்லாம் பொய்: நாராயணசாமி

By Mathi
Google Oneindia Tamil News

Madhavan Nair and Narayana Swamy
புதுச்சேரி: ஆண்ட்ரிக்ஸ்- தேவாஸ் ஒப்பந்தம் தொடர்பான விசாரணைக் குழு முன்பு விளக்கம் அளிக்க தமக்கு வாய்ப்பளிக்கவில்லை என்று இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர் கூறியுள்ளது பொய்யானது என்று மத்திய அமைச்சர் நாரயணசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நாராயணசாமி கூறியுள்ளதாவது:

ஆண்டிரிக்ஸ்- தேவாஸ் ஒப்பந்த முறைகேடு தொடர்பாக மாதவன் நாயர் உட்பட 4 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

மாதவன் நாயர், தமது தரப்பு விளக்கத்தை அளிக்க விசாரணைக் குழு வாய்ப்பளிக்கவில்லை என்று கூறியுள்ளார். ஆனால் விசாரணைக் குழு அறிக்கையில் மாதவன் நாயரிடம் தனிப்பட்ட முறையில் விசாரணை நடத்தப்பட்டதாக தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

ஒரு விசாரணைக் குழு எப்படி விசாரணையை நடத்த வேண்டுமோ அந்த நியதிகளின் அடிப்படையிலேயே விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது.

ஆனால் தமக்கு வாய்ப்பே கொடுக்கவில்லை என்று தவறான தகவலை நாட்டு மக்களுக்குப் பரப்பி வருகிறார் மாதவன் நாயர்.

மேலும் பிரதமர் மன்மோகன்சிங் அமைத்த சின்ஹா குழுவும், ஆண்டிரிக்ஸ்- தேவாஸ் ஒப்பந்தத்தோடு தொடர்புடைய 8 விஞ்ஞானிகளுக்கும் தமது சந்தேக கேள்விகளை அனுப்பி பதிலைப் பெற்றிருந்தது என்றும் நாராயணசாமி சுட்டிக்காட்டியுள்ளார்.

இவையெல்லாமே மாதவன் நாயரிடம் விசாரணை நடத்தியதை உறுதி செய்கிறது. இந்த விசாரணைகளுக்கெல்லாம் பிறகே மாதவன் நாயர் உட்பட 4 விஞ்ஞானிகளுக்கு அரசுப் பதவி வகிக்க தடை விதிக்கப்பட்டது.

ஆண்ட்ரிக்ஸ்- தேவாஸ் ஒப்பந்தத்தில் நிகழ்ந்தது இதுதான் என்று உறுதியாக அவர் தெரிவித்தார்.

English summary
Minister of State in the PMO V Narayanasamy today accused former ISRO chairman G Madhavan Nair of misleading the nation by saying he was not given a chance to explain his case before the high level panel which indicted him and three other space scientists in the Antrix-Devas deal.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X