For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பத்மநாபாவின் ஒரு நகையை மதிப்பிடவே குறைந்தது 20 நிமிடமாகும்- கேரள அரசு தகவல்

Google Oneindia Tamil News

Padmanabhaswamy Temple
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில் பொக்கிஷங்களில் உள்ள ஒவ்வொரு நகைகையும் மதிப்பீடு செய்ய குறைந்தது 20 நிமிடமாவது ஆகும் என கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

திருவனந்தபுரம்-பத்மநாபசாமி கோயில் ரகசிய அறைகளில் உள்ள பொக்கிஷங்களை கணக்கிட்டு மதிப்பீடு செய்ய, தேசிய அருட்காட்சியக தொல்பொருள் பாதுகாப்பு துறை தலைவர் வேலாயுதன் தலைமையிலான குழுவை உச்சநீதிமன்றம் அமைத்தது. வரும் 20ம் தேதி முதல் பொக்கிஷங்களை கணக்கிடும பணி தொடங்க உள்ளது. இதுபற்றி உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு நேற்று இடைக்கால அறிக்கை தாக்கல் செய்தது.

அதில் பொக்கிஷங்களை மதிப்பிடும் பணியை 20ம் தேதி தொடங்குவதற்கான எல்லா ஏற்பாடுகளும் தயாராக உள்ளன. பொக்கிஷங்களில் உள்ள நகைகள் அனைத்தும் மிகவும் பழங்காலத்தை சேர்ந்தவை. எனவே ஒவ்வொரு நகையையும் பரிசோதித்து மதிப்பீட குறைந்தது 20 நிமிடமாவது ஆகும். இதனால் மதிப்பீடு பணி முடிய நீண்ட நாட்களாகும் என்று கூறப்பட்டுள்ளது.

English summary
Each jewellery of Padmanabhaswamy temple treasure, will need 20 mins time for evaluation, Kerala govt has informed the SC in a statement.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X