For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வருமானவரி செலுத்த சென்னையில் சிறப்பு ஏற்பாடு - ரிசர்வ் வங்கி அறிவிப்பு

By Shankar
Google Oneindia Tamil News

R B I
சென்னை: வருமான வரி செலுத்துவோருக்காக சென்னையில் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது ரிசர்வ் வங்கி.

இதுகுறித்து ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குநர் என்.எஸ்.விஸ்வநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மார்ச் மாத கடைசியில் ரிசர்வ் வங்கியில் வருமான வரியை செலுத்த வருபவர்களின் எண்ணிக்கை மிக அதிக அளவில் இருப்பதை கருத்தில் கொண்டு கூடுதல் கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது. கடைசி நேர நெரிசலைத் தவிர்த்து, குறித்த நாளுக்கு முன்னதாகவே வரியை செலுத்துமாறு வேண்டுகிறோம்.

ரிசர்வ் வங்கிதவிர, தமிழகத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளின் சில குறிப்பிட்ட கிளைகளுக்கும் வரியை பணமாகவோ, காசோலையாகவோ பெற அதிகாரமளிக்கப்பட்டுள்ளது.

பாரத ஸ்டேட் வங்கி, ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர், ஸ்டேட் பாங்க் ஆப் ஹைதராபாத், ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர், ஸ்டேட் பாங்க் ஆப் பாட்டியாலா, அலகாபாத் வங்கி, ஆந்திரா வங்கி, பாங்க் ஆப் பரோடா, பாங்க் ஆப் இந்தியா, கார்ப்பரேஷன் வங்கி, தேனா வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பஞ்சாப் நேஷனால் வங்கி, சிண்டிகேட் வங்கி, யூனியன் பாங்க் ஆப் இந்தியா, யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா, யூகோ வங்கி, விஜயா வங்கி, தனியார் துறை வங்கிகளில் ஆக்ஸிஸ் வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ.வங்கி, ஐடிபீஜ வங்கி, எச்.டி.எப்.சி.வங்கி போன்ற வங்கிகளில் இந்த சிறப்பு கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வருமானவரி செலுத்துவோரின் வசதிக்காக செய்யப்பட்டுள்ள இந்த ஏற்பாட்டை பயன்படுத்திக்கொள்ளலாம்.

இவ்வாறு என்.எஸ்.விஸ்வநாதன் கூறி உள்ளார்.

English summary
The reserve Bank of India has made special arrangements for tax payers to pay their income tax in advance. The apex bank also announced the special counters for the same.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X