For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிறுதாவூர் பங்களாவில் வைத்து ஜெயலலிதா, சசி சந்திப்பு

Google Oneindia Tamil News

Jayalalitha and Sasikala
சென்னை: போயஸ் கார்டனை விட்டு சசிகலா வெளியேறிய நிலையில் கடந்த 16ம் தேதி சசிகலாவை சிறுதாவூரில் உள்ள பங்களாவுக்கு வர வைத்து அவரிடம் முக்கியமாகப் பேசியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா என்று கூறப்படுகிறது. அந்த சந்திப்பின்போது நடராஜன் கைது குறித்தும் ஜெயலலிதா முன்கூட்டியே தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

கடந்த 2011ம் ஆண்டு டிசம்பர் மாதம் 18ம் தேதி தனது நெருங்கிய தோழி சசிகலா உள்ளிட்ட 12 பேரை அதிமுகவில் இருந்து முதல்வர் ஜெயலலிதா நீக்கினார். ஆனால் அதற்கு முன்னதாகவே டிசம்பர் 10ம் தேதியே சசிகலா போயஸ் தோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். டிசம்பர் 12ம் தேதி சசிகலாவை யாரும் சந்திக்கக் கூடாது, பேசக் கூடாது என்று ஜெயலலிதா உத்தரவிட்டார்.

இதையடுத்து சசிகலாவின் கணவர் நடராஜன், தம்பி திவாகரன், உறவினரான கோவையைச் சேர்ந்த ராவணன் போன்றவர்கள் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அதிமுக ஆட்சி அமைந்தது முதல் சசிகலாவின் உறவினர்கள் அதிகார மையங்களாக மாறி கோடி கோடியாக வசூலித்ததும், சில பல சொத்துக்களை வாங்கி குவித்ததும் உளவுத்துறை மூலமாக ஜெயலலிதா தெரிந்து கொண்டதால் தான் இந்த நடவடிக்கை என்று கூறப்படுகின்றது.

இது உண்மையா ... இப்படியெல்லாம் நடக்குமா ? இல்லை இது நாடகமா… எப்படியும் மூன்று அல்லது ஆறு மாதங்களில் மீண்டும் சேர்ந்துவிடுவார்களா ? அப்படி சேர்ந்துவிட்டால் நாம் என்ன செய்வது?என்று அதிமுக முக்கிய அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் மண்டையை போட்டு உடைத்துக் கொண்டிருக்கின்றனர்.

இல்லை, இல்லை, இது நிரந்தரமான பிரவு தான். சந்தேகம் வேண்டாம். சசிகலா மீண்டும் முதல்வர் ஜெயலலிதாவோடு சேரவே முடியாது. அதற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார் முதல்வர் என்று எல்லாரும் பேசி வருகின்றனர்.

இந்த நிலையில் ஜெயலலிதாவும் சசிகலாவும் கடந்த 16ம் தேதி மாலை சிறுதாவூரில் சந்தித்துப் பேசியதாக கூறப்படுகின்றது. அப்போது இளவரசியும் உடன் இருந்தாராம். இந்த சந்திப்பு ஒரு மணி நேரம் நடந்துள்ளதாக கூறப்படுகின்றது. அப்போது அங்கு சோகம், வேகம், பாசம், என பல முக பாவனைகள் கலந்து சம்பவங்கள் நடைபெற்றதாக அதிமுக வட்டாரங்களில் இருந்தே தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த சந்திப்பின்போது நடராஜன் கைது குறித்து ஜெயலலிதா கூறியதாகவும் கூறப்படுகிறது. இந்த சந்திப்புக்குப் பின்னர்தான் பெங்களூர் கோர்ட்டில் சசிகலா ஆஜராகி கண்ணீர் வடித்தபடி தானே அத்தனைக்கும் பொறுப்பு என்று வாக்குமூலம் அளித்தார்.

தற்போது போயஸ் கார்டனை விட்டு சசிகலா வெளியேறினாலும், அவரது அண்ணி இளவரசி ஜெயலலிதாவுடன் இன்னும் தொடர்பில் உள்ளதாகவே கூறப்படுகின்றது. இளவரசி மூலமாகவே பல தகவல்கள் ஜெயலலிதா வசம் சென்றதாக ஒரு தகவல் உண்டு. இளவரசி மூலமே பல தகவல்கள் போயஸ் கார்டனுக்கு அப்டேட் செய்யப்படுகின்றதாம்.

தற்போது இளவரசி கொடியே போயஸ் கார்டனில் பறப்பதாகவும் கூறப்படுகின்றது. சசிகலா ஆதரவு அமைச்சர்கள் பலர் தங்களது பதவியை காப்பாற்றிக் கொள்ள ரகசியமாக இளவரசியின் உதவியை நாட ஆரம்பித்துள்ளதாகவும் பேச்சு அடிபடுகிறது.

ஆனால் ஏற்கனவே சசிகலா விவகாரத்தில் பட்ட சூட்டால், இளவரசிக்கு அந்த அளவுக்கு முதல்வர் ஜெயலலிதா இடம் தர மாட்டார் என்றும் திடமாக பேசப்படுகிறது.

English summary
Reports told that Sasikala's sister-in-law Ilavarasi is still close to ADMK chief cum CM Jayalalithaa. Even some ministers are secretly approaching Ilavarasi to help them to secure their posts.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X