இங்கிலாந்தில் 72,000 குடும்பங்களில் அப்பாக்களே இல்லை
லண்டன்: இங்கிலாந்தில் சுமார் 72,000 குடும்பங்களில் உள்ள குழந்தைகள் தந்தையின்றி வளர்கின்றனர் என்று ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் உள்ள 120,000 பிரச்சனைக்குரிய குடும்பங்கள் பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் 72,000 குடும்பங்களில் உள்ள குழந்தைகளுக்கு தந்தையே இல்லை. அந்த குழந்தைகள் தாயின் பராமரிப்பில் வளர்ந்து வருகின்றனர். மீதமுள்ள குடும்பங்களில் தந்தைகள் இருந்தாலும் அவர்கள் குடிகாரர்களாகவோ, போதைக்கு அடிமையாகவோ, வேலைக்குப் போகாமல் ஊர்சுற்றுபவர்களாகவோ உள்ளனர். இதனால் அவர்களால் தங்கள் பிள்ளைகளு்ககு சிறந்த முன்மாதிரியாக இருக்க முடியவில்லை.
இதில் விந்தை என்னவென்றால் ஆய்வுக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட 120,000 குடும்பங்களில் 20 சதவீத குடும்பங்களில் தலா 5 குழந்தைகள் உள்ளனர். ஏற்கனவே வறுமையில் வாடும் குடும்பங்களில் ஏராளமான குழந்தைகள் இருப்பது மேலும் பிரச்சனை தான். இவ்வாறு பிரச்சனைகள் அதிகமுள்ள குடும்பங்கள் அரசுக்கு தலைவலியாக உள்ளது.
இது குறித்து அந்நாட்டு அரசு அதிகாரி எரிக் பிக்கில்ஸ் கூறியதாவது,
பல குடும்பங்களில் தந்தைகளே இல்லாதது பெரிய பிரச்சனையாக உள்ளது. தந்தைகள் இருக்கும் குடும்பங்களில் அவர் குடிகாரர்களாகவோ, போதைப் பொருட்களுக்கு அடிமையாகவோ, வேலைக்கு செல்லாதவர்களாகவோ உள்ளனர். அத்தகைய தந்தைகளை வேலைக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்து வருகிறோம். அவர்கள் வேலைக்கு சென்று சம்பாதித்து பணம் கொண்டு வந்தால் தான் பிள்ளைகளுக்கு நல்ல முன்மாதிரியாக இருக்க முடியும் என்றார்.
இந்த பிரச்சனை உள்ள குடும்பத் தலைவர்களை வேலைக்கு அனுப்ப, குடி மற்றும் போதைப் பழக்கங்களில் இருந்து விடுபடவைக்க இங்கிலாந்து பிரதமர் டேவிட் காமரூன் 448 மில்லியன் பவுண்ட் செலவிலான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த திட்டக் குழுவில் அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் உள்ளனர். அவர்கள் பிரச்சனை உள்ள குடும்பங்கள் ஒவ்வொன்றுக்காக சென்று அந்த குடும்பத் தலைவர்களை ஒழுங்குபடுத்தும் செயலில் ஈடுபட்டுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications